ஓடிப் போன 4 மாணவிகள்! காரணம் கேட்டு அதிர்ந்த போலீசார்!!

"கேங்ஸ்டர் கேர்ள்ஸ்.. எங்க 4 பேருக்கு பயம்னா என்னன்னே தெரியாது..." எச்சரித்து பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்...
 | 

ஓடிப் போன 4 மாணவிகள்! காரணம் கேட்டு அதிர்ந்த போலீசார்!!

சென்னை ஆவடியில் உள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 4 பேரை காணவில்லை என ஆவடி காவல் நிலையத்தில் கடந்த 20ஆம் தேதி புகார் கொடுக்கப்பட்டது. ஒரே நேரத்தில் பள்ளிக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற மாணவிகள் மாயமான சம்பவம் சென்னை முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பம்பரமாய் சுழன்று காவல்துறையினர் அவரைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மாயமான மாணவி ஒருவர், தன்னுடைய செல்போனை எடுத்துச் சென்றிருக்கும் தகவல் போலீசாருக்குக் கிடைத்தது.

ஓடிப் போன 4 மாணவிகள்! காரணம் கேட்டு அதிர்ந்த போலீசார்!!உடனடியாக அந்த செல்போன் சிக்னலை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் பெங்களூரு காவல் துறையைத் தொடர்பு கொண்டு  4 மாணவிகளையும் போலீசார் மீட்டனர். இதையடுத்து மாணவிகளை சென்னை அழைத்துவந்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. "4 பேரும் நெருங்கிய தோழிகள். இந்த மாணவிகள் `கேங்ஸ்டர் கேர்ள்ஸ்' என்ற பெயரில் வாட்ஸ்அப் குழு ஒன்றில் உள்ளனர். அதில் பல தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.

ஓடிப் போன 4 மாணவிகள்! காரணம் கேட்டு அதிர்ந்த போலீசார்!!

இந்தச் சமயத்தில் பள்ளியிலும் வீட்டிலும் 4 மாணவிகளைச் சரியாகப் படிக்கவில்லை என்று கண்டித்துள்ளனர். அதனால், கடந்த 20ம் தேதி காலையில் பள்ளிக்குச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டுச் சென்றவர்கள் பின்னர் வீடு திரும்பவில்லை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும் எங்களுக்கு எந்த பயமும் இல்லை, பெற்றோரை பயமுறுத்தவே பெங்களூரு  சென்றோம், என அவர்கள் கூறியுள்ளனர். மாணவிகளை பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கு முன்பாக அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP