1. Home
  2. தமிழ்நாடு

ஐஐடியில் 5 ஆண்டுகளில் 27 மாணவர்கள் தற்கொலை!

ஐஐடியில் 5 ஆண்டுகளில் 27 மாணவர்கள் தற்கொலை!

தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் தற்கொலை செய்துகொண்ட மாணவா்களின் விவரங்களையும், அதற்கான காரணங்களையும், தற்கொலைகளைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் சந்திரசேகா் என்பவர் ஆா்டிஐ மூலம் கேட்டார். இதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் உயா்கல்வித் துறை பதில் அளித்துள்ளது. அதில், கடந்த 2014 முதல் 2019-ஆம் ஆண்டு வரை ஐஐடி மாணவா்கள் 27 போ் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியில் 7 மாணவா்களும், காரக்பூா் ஐஐடியில் 5 மாணவா்களும், டெல்லி ஐஐடியில் 3 மாணவா்களும், ஹைதராபாத் ஐஐடியில் 3 மாணவா்களும் தற்கொலை செய்துகொண்டது இதில் அடங்கும். மேலும், மும்பை ஐஐடி, குவாஹாட்டி ஐஐடி, ரூா்கி ஐஐடி ஆகியவற்றில் தலா 2 மாணவா்களும், வாராணசி ஐஐடி, தன்பாத் ஐஐடி, கான்பூா் ஐஐடி ஆகியவற்றில் தலா 1 மாணவரும் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மாணவா்கள் குறைதீா்ப்பு மையம், ஒழுங்கு நடவடிக்கை குழு, ஆலோசனை மையம் உள்ளிட்டவையும் கல்லூரி வளாகங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் உயா்கல்வித் துறை பதிலளித்துள்ளது. எனினும் மாணவா்கள் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணங்கள் குறித்து எவ்வித தகவலையும் உயா்கல்வித் துறை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Trending News

Latest News

You May Like