காதலிக்காத பெண்ணை கடத்தி வைத்து 2 நாட்கள் சித்ரவதை! பட்டினிப் போட்டு செய்த கொடுமை!?

காதலிக்காத பெண்ணை கடத்தி வைத்து 2 நாட்கள் சித்ரவதை! பட்டினிப் போட்டு செய்த கொடுமை!?
 | 

காதலிக்காத பெண்ணை கடத்தி வைத்து 2 நாட்கள் சித்ரவதை! பட்டினிப் போட்டு செய்த கொடுமை!?

தூத்துக்குடி மாவட்டம் செட்டியாபத்து கிராமத்தை சேர்ந்தவர்கள்  சக்திவேல், வசந்தா தம்பதியினர். இவர்களுக்கு  நான்கு மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சக்திவேலை விட்டுப் பிரிந்த வசந்தா திருப்பூரில் தனியாக வசித்து வருகிறார். 

சக்திவேலின் 4 மகள்களில் ஒருவரான கலைச்செல்வி, கடந்த டிசம்பரில் திருப்பூரில் இருக்கும் தாய் வசந்தாவின் வீட்டுக்கு சென்று விட்டு புத்தாண்டு பிறந்ததும் தந்தையைப் பார்க்க சொந்த ஊருக்கு திரும்பியதாக கூறப்படுகிறது. 

காதலிக்காத பெண்ணை கடத்தி வைத்து 2 நாட்கள் சித்ரவதை! பட்டினிப் போட்டு செய்த கொடுமை!?

திருப்பூரில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த கலைச்செல்வி, தந்தையைப் பார்க்கவும் வரவில்லை. கணவனும், மனைவியும் பேசிக் கொள்ளாததால், தாயும் இருப்பாள் என்று தந்தையும், தந்தையுடன் இருப்பாள் என்று தாயாரும் நினைத்துக் கொண்டிருந்துள்ளனர். தூத்துக்குடிக்கு வந்துக் கொண்டிருந்த மாணவி கலைச்செல்வியை, வழியில் வரும் மர்மநபர்கள் சிலர் கடத்திச் சென்றுவிட்டு, இரு தினங்கள் அடைத்து வைத்திருந்து கொடுமைப்படுத்தி, சீரழித்து, அதன் பின்னர் அவரது சொந்த ஊரான செட்டியாபத்து கிராமத்தில் உள்ள வீட்டின் முன்பு நடுரோட்டில் விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. 

இரண்டு நாட்களாக அவருக்கு உணவு வழங்காமல் தனியறையில் அடைத்து வைத்து கொடுமை செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. கண் திறக்க முடியாமல் மிகவும் சோர்ந்து காணப்பட்ட கலைச்செல்வியை அக்கம்பக்கத்தினர் மீட்டு, உடன்குடியில் உள்ள காலன் குடியிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

தலை முடி அறுக்கப்பட்டு, கைகளில் எல்லாம் சூடு போட்ட காயங்களுடன் இருந்த கலைச்செல்வி, தன்னை மர்ம நபர்கள் சிலர் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகக் கூறினார். இதுகுறித்து குலசேகரம்பட்டினம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின்  முதற்கட்ட விசாரணையில் மாணவி கலைச்செல்வியை காதலிக்கச் சொல்லி தொடர்ந்து வற்புறுத்தி வந்த அய்யப்பன் தான் இச்செயலில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP