1. Home
  2. தமிழ்நாடு

பொங்கலை முன்னிட்டு 16,971 பேருந்துகள்!

பொங்கலை முன்னிட்டு 16,971 பேருந்துகள்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,971 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக அரசு போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த பேருந்துகள் தமிழகம் முழுவதும் இம்மாதம் 19ம் தேதி வரையில் சென்னை, கோவை, பெங்களூரு, திருப்பூர் உள்ளிட்ட ஊர்களுக்கு இந்த 16,971 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வழக்கமாக இயக்கப்படும் 8,900 பேருந்துகளும் இந்த எண்ணிக்கைத் தவிர தினசரி இயக்கப்பட்டு வருவதாகவும் அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், இந்த மாதம் 19ம் தேதி வரை இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், பொதுமக்கள் இந்த சிறப்பு பேருந்துகளை சொந்த ஊருக்குச் செல்வதற்கும், பொங்கல் பண்டிகை முடிந்து ஊருக்குத் திரும்புவதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், இந்த விடுமுறை நாட்களில் தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like