1,50,000 கோடி கொடுத்துட்டாங்க! மோடிக்கு செக் வைக்கும் ப.சிதம்பரம்!

1,50,000 கோடி கொடுத்துட்டாங்க! மோடிக்கு செக் வைக்கும் ப.சிதம்பரம்!
 | 

1,50,000 கோடி கொடுத்துட்டாங்க! மோடிக்கு செக் வைக்கும் ப.சிதம்பரம்!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதாகி திகார் சிறையிலிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தற்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்.  அதன் பிறகு சத்தியமூர்த்தி பவனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பேசினார். 

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கே.வீ.தங்க பாலு, எம்.கிருஷ்ணசாமி, மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், அகில இந்தியச் செயலாளர் சஞ்சய் தத் உள்ளிட்டோரும் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசியதாவது:-

சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டியை 3 முதல் 6 சதவீதம் வரை உயர்த்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய பாஜக ஆட்சியில் சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்க வேண்டும் என்பது தான் அவர்களின் நிலைப்பாடு. அதற்காக, எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள், எம்.பி.க்கள் மீது சிபிஐ, அமலாக்கத் துறை மூலம் வழக்கு தொடுக்கப்படுகிறது. 

பாஜக என்பது, கங்கை நதியைப் போல. குளித்தவுடன் அனைத்து பாவங்களும் நீங்கி விடும். ஒரு நாளும் அந்த கங்கை நதியில் குளிக்க மாட்டேன். நீதிக்கு, நீதிபதிக்கு தலை வணங்குவேன். அநீதிக்கு வளைய மாட்டேன்.

2016 நவம்பர் 8-ம் தேதி பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுத்த பிறகு நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்துக்கு சென்று விட்டது. இதனை தான் இனி நான் பேசப் போகிறேன். அனைத்து காங்கிரஸ்காரர்களும் பேச வேண்டும். 

ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் கோடியை எடுத்து, அதில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை 800 முதலாளிகளுக்கு கொடுத்துள்ளனர். இதனால் பட்ஜெட்டில் துண்டு விழப்போகிறது.

இதனை ஈடுகட்ட, அடுத்த ஜிஎஸ்டி கூட்டத்தில் ஜிஎஸ்டி வரியை 5-லிருந்து 8 சதவீதமாகவும், 8-லிருந்து 12 சதவீதமாகவும், 12-லிருந்து 18 சதவீதமாகவும் உயர்த்த திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் சாதாரண, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வாங்கும் பொருட்களில் இருந்து ரூ.1 லட்சம் கோடி வரியாக எடுக்கப் போகிறார்கள். இந்திய மக்களுக்கு எதிராக இதை விட பெரிய யுத்தத்தை யாரும் தொடங்க முடியாது என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP