13 வயது சிறுமி கடத்தல்! குளித்தலையில் பரபரப்பு!!

இயற்கை உபாதையை கழிக்க சென்ற சிறுமி காரில் கடத்தல்.. அதிரடி காட்டிய போலீசார்..
 | 

13 வயது சிறுமி கடத்தல்! குளித்தலையில் பரபரப்பு!!

குளித்தலை அருகே மர்ம நபர்களால் கடத்தப்பட்ட 13 வயது சிறுமியை போலீசார் மீட்டனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வில்லுக்காரன் பட்டியைச் சேர்ந்தவர் கீதா(13). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் காலையில் எழுந்து இயற்கை உபாதையை கழிக்க சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் சிறுமியை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

13 வயது சிறுமி கடத்தல்! குளித்தலையில் பரபரப்பு!!

இதனிடையே, சிறுமியை அடையாளம் தெரியாத நபர்கள் காரில் கடத்திச் சென்றதாக அப்பகுதி மக்கள் கூறினர். இதனையடுத்து தீவிர விசாரணை நடத்தி போலீசார் 24 மணி நேரத்திற்குள் சிறுமியை தேடி கண்டுபிடித்து மீட்டு விட்டனர். ஆனால், கடத்தியவர்கள் அங்கிருந்து தப்பித்துச் சென்று விட்டனர்.

13 வயது சிறுமி கடத்தல்! குளித்தலையில் பரபரப்பு!!

பின்னர், சிறுமியிடம் விசாரணை செய்து மூன்று நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP