10, 11, 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: 2019ம் ஆண்டிற்கான பொதுத்தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 9.45 லட்சம் மாணவர்கள் எழுதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 27ல் தொடங்கி ஏப்.,13ல் நிறைவடைகிறது. இதற்கான தேர்வு முடிவுகள் மே 4ம் தேதி வெளியாகிறது. 8.26 லட்சம் மாணவர்கள் எழுதும் பிளஸ்1 பொதுத்தேர்வு,
 | 

10, 11, 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு!!

தமிழகத்தில் இந்தாண்டு 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று பள்ளிக் கல்வித் துறை  தேதி அறிவித்துள்ளது.

10, 11, 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு!!

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறும் போது,  2019ம் ஆண்டிற்கான பொதுத் தேர்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வருடம் 9.45 லட்சம் மாணவர்கள் எழுதும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 27ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 13ம் தேதி நிறைவடைகிறது. இதற்கான தேர்வு முடிவுகள் மே 4ம் தேதி வெளியாகிறது.

அதே போன்று 8.26 லட்சம் மாணவர்கள் எழுதும் பிளஸ்1 பொதுத் தேர்வுகள், மார்ச் 4ம் தேதி தொடங்கி மார்ச் 26ம் தேதி  முடிகிறது. இதன் முடிவுகள் மே 14ம் தேதி வெளியாகிறது.

10, 11, 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு!!

தமிழகத்தில் 8.16 மாணவர்கள் எழுதும் பிளஸ்2 வகுப்புகளுக்கான  பொதுத் தேர்வு, மார்ச் 2ம் தேதி தொடங்கி மார்ச் 24ம் தேதி வரையில் நடக்கிறது. ப்ளஸ் டூ வகுப்புகளுக்கான தேர்வு  முடிவுகள் ஏப்ரல் மாதம் 24ம் தேதி வெளியாகிறது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP