விஷம் அருந்தி பள்ளியில் தற்கொலை செய்துக்கொண்ட +1மாணவி.!!

விஷம் அருந்தி பள்ளியில் தற்கொலை செய்துக்கொண்ட பள்ளி மாணவி.. அதிரவைக்கும் பின்னணி!!
 | 

விஷம் அருந்தி பள்ளியில் தற்கொலை செய்துக்கொண்ட +1மாணவி.!!

கோவை அன்னூர் கரிய கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் டெய்லர் புஷ்பராஜ். இவரது மகள் மகா பார்கவி (16) அருகில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர் படிப்பில் சுமார் என்பதால், வீட்டின் சூழ்நிலையை அறிந்து நன்றாக படிக்க வேண்டும் என்று பெற்றோர் அறிவுரை கூறி வந்தனர். இதனால் விரக்தியடைந்து சம்பவத்தன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு சென்ற மாணவி திடீரென மயங்கி விழுந்தார்.

விஷம் அருந்தி பள்ளியில் தற்கொலை செய்துக்கொண்ட +1மாணவி.!!

இதை கண்டு அதிர்ச்சியடைந்த பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அப்போது மாணவி வீட்டிலேயே பூச்சி மருந்து குடித்துவிட்டு பள்ளிக்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து இது குறித்து பள்ளி ஊழியர்கள் மாணவியின் தந்தை புஷ்பராஜூக்கு தகவல் தெரிவித்தனர்.

விஷம் அருந்தி பள்ளியில் தற்கொலை செய்துக்கொண்ட +1மாணவி.!!

இந்நிலையில் மாணவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு மகாபார்கவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP