தோனியின் ஓய்வு குறித்து யுவராஜ் சிங் அதிரடி பேட்டி

தோனியின் ஓய்வு குறித்து மக்கள் தொடர்ந்து பேசுவது நியாமற்றது என்றும், ரிஷாப் பன்டை தோனியுடன் ஒப்பிடக்கூடாது என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
 | 

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய யுவராஜ்சிங், தோனி  ஓய்வு பெறுவதைப் பற்றி மக்கள் தொடர்ந்து பேசுவது நியாமற்றது. இந்திய கிரிக்கெட் அணிக்காக நிறைய பங்களிப்புகளை கொடுத்தவர் தோனி. அவர் என்ன விரும்புகிறார் என்பதை தீர்மானிக்க நாம் அவருக்கு நேரம் கொடுக்க வேண்டும். தற்போது, தோனி கிரிக்கெட்டிலிருந்து விலகி தனது நேரத்தை அனுபவித்து வருவதால், ரிஷாப் பன்ட் மீது பக்கம் நம் எல்லோருக்கும் கவனம் மாறிவிட்டது’ என்றார்.  

தோனியின் ஓய்வு குறித்து யுவராஜ் சிங் அதிரடி பேட்டி

மேலும், ரிஷாப் பன்ட் திறமையானவராக இருந்தபோதிலும், தனது கவனக்குறைவான அணுகுமுறையால் இந்திய ரசிகர்களை ஏமாற்றியுள்ளார் .ரிஷாப் பன்ட் உடன் பேசப்பட வேண்டும். யாராவது அவரிடமிருந்து சிறந்ததைப் பெற வேண்டும். ஆனால், அவருடன் யார் பேசுகிறார்கள் என்பதையும், அவரை நன்கு புரிந்துகொள்ள உதவுவதையும் காண நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன். அவரை விமர்சிப்பது தீர்வு அல்ல. தோனியுடன் ரிஷாப்பை ஒப்பிடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. அவர் தோனியாக பல ஆண்டுகள் ஆகும்’ என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP