யுவ்ராஜ் சிங்கின் சாதனையை முறியடித்த வங்கதேச வீரர் !

உலகக்கோப்பை கிரிக்கெட்டில், ஒரே போட்டியில் அரை சதம் அடித்தது மட்டுமின்றி, 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஆல் -ரவுண்டர்கள் வரிசையில், வங்கதேச அணி வீரர் சாகிப் அல் ஹசன் தற்போது முதலிடத்தை பிடித்துள்ளார்.
 | 

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில்,  ஹசன் 51 ரன்களை அடித்து அசத்தினார். அத்துடன் தமது மாயாஜால சுழற்பந்து வீச்சின் மூலம், 10 ஓவர்களில் வெறும் 29 ரன்களை மட்டும் கொடுத்து, 5 விக்கெட்டுகளையும் சாய்த்து கலக்கினார்.

இதற்கு முன்னர், 2011 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் ஆல் - ரவுண்டரான யுவ்ராஜ் சிங், 50 ரன்கள் எடுத்தார். அத்துடன், 31 ரன்களை மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியது தான் இதுவரை சாதனையாக இருந்து வந்தது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP