நீங்கள்தான் என் சூப்பர் ஸ்டார்: தாதா கங்குலி

யுவராஜ்சிங் தன்னுடைய சூப்பர் ஸ்டார் என்று பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்கவுள்ள சவ்ரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
 | 

நீங்கள்தான் என் சூப்பர் ஸ்டார்: தாதா கங்குலி

யுவராஜ்சிங் தன்னுடைய சூப்பர் ஸ்டார் என்று பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்கவுள்ள சவ்ரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்கவுள்ள சவ்ரவ் கங்குலிக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் வாழ்த்து தெரிவித்திருந்தார். அவரது வாழ்த்து செய்தியில், ‘பெரிய மனிதருக்கு பெரிய பயணம். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனில் இருந்து பிசிசியை தலைவர். ஒரு நிர்வாகியாக கிரிக்கெட் வீரர் இருக்கப்போவது சிறப்பானதாகும். இதனால், நிர்வாகம் என்பது ஒரு கிரிக்கெட் வீரர் பார்வையில் இருந்து எப்படி இருக்கும் என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள். “யோயோ” முறை அமலில் இருந்தபோது நீங்கள் தலைவராக இருந்திருக்கலாம், குட்லக் தாதா’ என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

யுவராஜின் இந்த பதிவுக்கு நன்றி தெரிவித்து கங்குலி ட்விட்டரில், ‘சிறந்த வீரருக்கு நன்றி. இந்தியாவுக்கு உலகக்கோப்பைகளை வென்று கொடுத்தவர் நீங்கள். தற்போது விளையாட்டுக்கு நல்ல காரியங்களை செய்ய வேண்டிய நேரம். நீங்கள்தான் என் சூப்பர் ஸ்டார். கடவுள் உங்களை எப்போதும் ஆசீர்வதிப்பார்’ என்று பதிவிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி வருகிற 23ஆம் தேதி பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP