உலகக்கோப்பையில் அரையிறுதியில் தோற்காத ஆஸி.,: இங்கிலாந்து அதை தகர்க்குமா?

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன. எட்ஜ்பாஸ்டான் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்று ஒரு கணிப்பு.
 | 

உலகக்கோப்பையில் அரையிறுதியில் தோற்காத ஆஸி.,: இங்கிலாந்து அதை தகர்க்குமா?

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன. எட்ஜ்பாஸ்டான் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்று ஒரு கணிப்பு.

கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டியை எப்படி விறுவிறுப்பாகவும், எதிர்பார்ப்பாக இருக்குமோ, அதுபோல், இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மோதும் போட்டி இருக்கும். சாதாரண லீக் போட்டியில் அப்படி என்றால், உலகக்கோப்பையில் அரையிறுதி இரு அணிகளும் மோதுகிறது என்றால் சொல்லவா வேண்டும்.

இப்போட்டி நடைபெற்று வரும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் 1993 ஆம் ஆண்டிற்கு பிறகு ஆஸ்திரேலியா ஒரு போட்டியில் கூட வென்றிதில்லை. 2017 சாம்பியன்ஸ் டிராபியிலும் இங்கிலாந்திடம் வீழ்ந்த ஆஸ்திரேலியா, 5 உலகக்கோப்பை வென்ற அணி என்ற அழுத்தம் மட்டும் இங்கிலாந்திற்கு இருக்கும். இருப்பினும், ஆஸ்திரேலியா இதுவரை விளையாடிய 6 அரையிறுதி போட்டியில் 5-ல் வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. அந்த ஆட்டம் 1999 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. 

உலகக்கோப்பையில் அரையிறுதியில் தோற்காத ஆஸி.,: இங்கிலாந்து அதை தகர்க்குமா?

ஆஸ்திரேலிய அணியில் வீரர்களின் காயம் தலைவலியாக உள்ளது. காயத்தால் கவாஜா விலகியுள்ளதால், ஸ்மித்திற்கு பொறுப்பு இன்னும் அதிகமாக இருக்கும். தொடக்க ஆட்டக்காரர்களாக பட்டையை கிளப்பி வந்த பின்ச், வார்னர் இந்த போட்டியில் ஏமாற்றி விட்டனர். பந்துவீச்சில் ஸ்டார்க் மிரட்டி வருகிறார்.  நடப்பு உலகக்கோப்பையில் அதிக (26 விக்கெட்டுகள்)  விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக இருக்கும் ஸ்டார்க், 2015 உலகக்கோப்பைஅரையிறுதி, இறுதியில் வெற்றிக்கு வித்திட்டார். அதுபோலவே இப்பவும் நிகழும் என்ற நம்பிக்கையில் ஆஸி., ரசிகர்கள் உள்ளனர்.

லீக் ஆட்டங்களில் அப்படி இப்படி விளையாடி ஒரேடியாக அரையிறுதி தகுதிபெற்று இங்கிலாந்து விளையாடி வருகிறது. இதுவரை உலகக்கோப்பையை வெல்லாத இங்கிலாந்து, 1992 உலகக்கோப்பையில் அரையிறுதி வரை சென்றது குறிப்பிடத்தக்கது.

எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் விளையாடி சாதனை புரிந்துள்ள இங்கிலாந்திற்கு இன்றைய ஆட்டமும் கைகூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராய், பேர்ஸ்டோவ், ரூட், ஸ்டோக்ஸ், மோர்கன், பட்லர் ஆகிய பேட்ஸ்மேன்கள் மொரட்டு பார்மில் உள்ளனர். ராய், பேர்ஸ்டோவை வீழ்த்துவதற்கு ஆஸி., திட்டங்களை தீட்டி வைத்தால் தான், இங்கிலாந்தை முதலில் இருந்தே கட்டுப்படுத்த முடியும்.  பந்துவீச்சில் ஆர்ச்சர், வோக்ஸ், வுட், பிளங்கட் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ரஷித், மொயின் அலியின் சுழற்பந்து வீச்சு தான் எடுபடாமல் போய்விடுகிறது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசியாக விளையாடிய 15 போட்டியில் 12-இல் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது. அனைத்து விதத்திலும் இரு அணிகளையும் ஒப்பிடும்போது இங்கிலாந்தின் கையே ஓங்கியிருக்கிறது. இதுதவிர, சொந்த ஊர், ரசிகர்கள் என்ற பலமும் இங்கிலாந்துக்கு பக்கபலமாக இருப்பதால் இன்றைய போட்டியில் இங்கிலாந்து வெல்வதற்கே அதிக வாய்ப்புள்ளது.

போட்டி நடைபெற்று வரும் பிர்மிங்ஹாமில் மழை பெய்வதற்கு ஐம்பது சதவீதம் வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இருந்தாலும், முழுமையாக ஆட்டம் நடைபெறும் என்று நம்புவோம்.

உலகக்கோப்பையில் அரையிறுதியில் தோற்காத ஆஸி.,: இங்கிலாந்து அதை தகர்க்குமா?

வி.ராமசுந்தரம்

தொழிலதிபர், கிரிக்கெட் விமர்சகர்

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP