வேர்ல்டுகப் : ஆப்கானிஸ்தானை பந்தாடிய வங்கதேசம்!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானை 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டதன் மூலம், வங்கதேச அணி புள்ளிகள் பட்டியலில் 5-ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
 | 

வேர்ல்டுகப் : ஆப்கானிஸ்தானை பந்தாடிய வங்கதேசம்!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானை 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டதன் மூலம், வங்கதேச அணி புள்ளிகள் பட்டியலில் 5-ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இங்கிலாந்தின் சௌத்தாம்டனில் உள்ள ரோஸ் பௌல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான், முதலில் பந்துவீச தீர்மானித்தது.

இதையடுத்து பேட்டிங் செய்த வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 262 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக, முஜ்ஃபுர்குர் ரஷிம் 83 ரன்களும், ஷாகிப் அல் ஹசம் 51 ரன்களும் எடுத்தனர். ஆப்கானிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் முஜிப் -உர் -ரஹ்மான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

263 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 47 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 200 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக, ஷின்வாரி 49 ரன்களும், குல்பதீன் நயிப் 47 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து, வங்கதேச அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வெற்றி கொண்டதோடு மட்டுமில்லாமல், புள்ளிகள் பட்டியலில் 5-ஆவது இடத்துக்கும் முன்னேறியுள்ளது. இதனால், அந்த அணி அரையிறுதி சுற்றுக்குள் நுழையவதற்கு பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

10 ஓவர்களில் வெறும் 29 ரன்களை மட்டுமே கொடுத்து, 5 விக்கெட்டுகளை வீசிய, வங்கதேச அணியின் ஆல் ரவுண்டரான ஷாகிப் அல் ஹசம் ஆட்டநாயகான தேர்ந்தெடுக்கப்பட்டார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP