உலகக்கோப்பை: சாதனை படைத்த வில்லியம்சன்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஒன்றில் அதிக ரன்கள் எடுத்த கேப்டன் என்ற சாதனையை வில்லியம்சன் படைத்துள்ளார்.
 | 

உலகக்கோப்பை: சாதனை படைத்த வில்லியம்சன்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஒன்றில் அதிக ரன்கள் எடுத்த கேப்டன் என்ற சாதனையை வில்லியம்சன் படைத்துள்ளார்.

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் தற்போது லார்ட்ஸ் மைதானத்தில் மோதி வருகிறது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் செய்து வருகிறது. 

இந்த நிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஒன்றில் அதிக ரன்கள் எடுத்த கேப்டன் என்ற சாதனையை வில்லியம்சன் படைத்துள்ளார். 9 இன்னிங்ஸில் 549 ரன்களை கடந்து இலங்கையின் ஜெயவர்தனே சாதனையை முறியடுத்துள்ளார்.

முன்னதாக, கப்தில் 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.  நியூசிலாந்து 13 ஓவர்களின் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. நிக்கோலஸ் 21, வில்லியம்சன் 2 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP