வேர்ல்டுகப் கிரிக்கெட் : தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா தென்னாப்பிரிக்கா?

ஒரு போட்டியில், ஓர் அணி பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங்கில் ஏதாவதொன்றில் சொதப்பினால் பரவாயில்லை. ஆனால், இந்த மூன்றிலுமே சோடை போனாலும் எப்படி? இப்படிதான் தென்னாப்பிரிக்கா அணியை போல், தோல்வி மேல் தோல்வியை சந்திக்க வேண்டி வரும்.
 | 

வேர்ல்டுகப் கிரிக்கெட் : தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா தென்னாப்பிரிக்கா?

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்து, வங்கதேசம், இந்தியா என மூன்று அணிகளுக்கு எதிராக, தான் இதுவரை விளையாடிய மூன்று ஆட்டங்களிலும் தென்னாப்பிரிக்க அணி தோல்வியை தழுவியுள்ளது.

ஒரு போட்டியில்,  ஓர் அணி பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங்கில் ஏதாவதொன்றில் சொதப்பினால் பரவாயில்லை. ஆனால், இந்த மூன்றிலுமே சோடை போனாலும் எப்படி? இப்படிதான் தென்னாப்பிரிக்கா அணியை போல், தோல்வி மேல் தோல்வியை சந்திக்க வேண்டி வரும்.

 ஹாட்ரிக் தோல்வியின் விளைவாக, இத்தொடரில் இனி மீதமுள்ள 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால்தான் உலகக்கோப்பை போட்டியின் அரையிறுதி சுற்றில் தகுதிபெற முடியும் என்ற அழுத்தத்துடன் தென்னாப்பிரிக்க அணி இன்று வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்கிறது.

வேர்ல்டுகப் கிரிக்கெட் : தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா தென்னாப்பிரிக்கா?

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான, ஐசிசி தரவரிசை பட்டியலில் மிகவும் பின்தங்கியதன் விளைவாக, கடந்த ஓராண்டுக்கு முன்புவரை, உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்க முடியாத மோசமான  நிலையில் இருந்த அணி தான் வெண்ட்இண்டீஸ். அந்த இக்கட்டான சூழலில் இருந்து மீண்டு வந்து, உலகக்கோப்பை தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ளதென்றால் அந்த அணியின் திறமையை நினைத்து பாருங்கள்.

அதேசமயம், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பான வெற்றியை பெற்ற அதே அணிதான், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், எளிதாக வெற்றிபெற வேண்டிய நிலையில் தோல்வியை தழுவியது. இந்த நிச்சயமற்றதன்மை தான் வெஸ்ட் இண்டீஸ் அணியின் மிகப்பெரிய மைனஸ். அதாவது, ஒன்று அபாரமாக வெற்றி பெறுவது அல்லது மோசமாக தோல்வியடைவது என்பதே வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஸ்டைலாக உள்ளது.

இரு அணிகளின் பலம், பலவீனங்களை வைத்து பார்க்கும்போது, ஓப்பீட்டளவில் அனுபவமிக்க அணி என்ற அடிப்படையில் தென்னாப்பிரிக்க அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்.

ராமசுந்தரம்,

தொழிலதிபர், கிரிக்கெட் விமர்சகர் 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP