உலகக்கோப்பையை வென்று வா என் தலைவனே... தோனிக்கு தமிழில் பிறந்த நாள் வாழ்த்து கூறி அசத்தியுள்ள பிரபலம்!

‘என் நண்பன், என் தலைவன் தோனிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்’ என்று கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் வாழ்த்து தெரிவித்து அசத்தியுள்ளார்.
 | 

உலகக்கோப்பையை வென்று வா என் தலைவனே... தோனிக்கு தமிழில் பிறந்த நாள் வாழ்த்து கூறி அசத்தியுள்ள பிரபலம்!

'என் நண்பன், என் தலைவன் தோனிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்’ என்று கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் வாழ்த்து தெரிவித்து அசத்தியுள்ளார்.

இன்று ‘தல’ தோனியின் 38-ஆவது பிறந்த நாள். தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து சமூகவலைதளத்தையே ஆக்கிரமித்துள்ளனர். வாட்ஸ் அப் ஸ்டேடஸ், டீபிக்களில் எல்லாம் ஹேப்பி பர்த்டே மாஹி, தோனி என்று ரசிகர்கள் அன்பு மழை பொழிந்து வருகின்றனர்.

சினிமா பிரபலங்களும், சக கிரிக்கெட் வீரர்களும் தோனிக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில், வாழ்த்துகளையும், வீர வசனங்களையும் தமிழில் பதிவிட்டு கலக்கி வரும் சிஎஸ்கே வீரர் ஹர்பஜன் சிங், தோனிக்கு தமிழில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவரது வாழ்த்து செய்தியில், ‘என்  நண்பன்!! என் தலைவன்!! ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிற்கும் தல. இப்பிடி சொல்லிட்டே போலாம். சோதனைகளை எல்லாம் சாதனையா மாத்துற ஒரு சக்தி தோனி. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என் உயிர் நண்பா தோனி. மக்களின் நிரந்தர சொந்தமே உலகக்கோப்பை வென்று வா’ என்று ஹர்பஜன் குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP