இந்தியாவை மிரட்டியது போல் வங்கதேசத்தையும் ஆப்கானிஸ்தான் மிரட்டுமா?

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆசிய நாடுகளான வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் மோதும் போட்டி, சவுதாம்ப்டனில் உள்ள ரோஸ்பவுல் மைதனாத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டி குறித்து ஓர் சிறு அலசல்.
 | 

இந்தியாவை மிரட்டியது போல் வங்கதேசத்தையும் ஆப்கானிஸ்தான் மிரட்டுமா?

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆசிய நாடுகளான வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் மோதும் போட்டி, சவுதாம்ப்டனில் உள்ள ரோஸ்பவுல் மைதனாத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டி குறித்து ஓர் சிறு அலசல்.

வங்கதேசம்

வங்கதேச அணியில் ஷாகிப் அல் ஹசன் மட்டுமே அனைத்து விதத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.  நடப்பு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் டாப் 5-இல் ஷாகிப் அல் ஹசன் உள்ளார். வங்கதேசம் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி பேட்டிங்கில் ஜொலித்ததால் மட்டுமே கிடைத்தது. பந்துவீச்சு படுமோசம்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 322 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் 382 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி 49 ரன்கள் வித்தியாசத்திலேயே தோல்வியுற்றது. இதனால் தான் சொல்லுகிறோம் பேட்டிங்கில் வங்கதேசம் வலுவாக உள்ளது என்று. ஷாகிப் அல் ஹசன் தவிர்த்து, ரஹீம், மகமதுல்லா பேட்டிங்கில் அசத்துகின்றனர்.

பந்துவீச்சில் கேப்டன் மோர்டசா, சைய்புதீன் மெச்சும் அளவிற்கு பந்துவீசவில்லை. முஸ்தாபிகர் ரஹ்மான் சில போட்டிகளில் விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், தனது முதல் ஸ்பெலில்லில் விக்கெட்டுகளை எடுக்க திணறுகிறார். ஆப்கானிஸ்தானை அதிக ரன் வித்தியாசத்தில் வீழ்த்தினால் ரன் ரேட்டில் வங்கதேசம் இறங்காமல் இருக்கும்.

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் நடப்பு உலகக்கோப்பை தொடரில், இதுவரை வெற்றி அடையவில்லை. இருந்தாலும், இந்தியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் அந்த அணியின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. இந்தியாவை மிரள வைத்து, 224 ரன்கள் மட்டுமே எடுக்க வைத்தது.
அந்த அணியிலும் பேட்டிங் இதுவரை சொதப்பலாகவே உள்ளது. சுழற்பந்து வீச்சு தான் ஆப்கானிஸ்தானுக்கு கை கொடுத்து வருகிறது. முஜுபூர் ரஹ்மான், ரஷீத் கான், நபி ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களை நம்பிதான் அணி இருக்கிறது. 

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நபி பேட்டிங்கில் மிரட்டியதால், இன்றைய போட்டியில் அவர் எப்படி செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ரோஸ்பவுல் மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக உள்ளதால் வங்கதேசத்தை கட்டுப்படுத்த ஆப்கானுக்கு வாய்ப்புள்ளது என்றாலும், இந்த போட்டியில் வெற்றி பெற வங்தேசத்துக்கே அதிக வாய்ப்புள்ளது. முதலில் பேட்டிங் செய்யும் அணி 270 ரன்களுக்கு மேல் எடுத்தால் வெற்றி பெறலாம். 

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் போட்டி போல், ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் போட்டி இருக்கும் என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த உலகக்கோப்பையில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை விட, போட்டியின்போது மழை பெய்துவிடக்கூடாது என்ற எண்ணம் தான் ரசிகர்கள் மனதில் ஓடுகிறது. ஏனென்றால், நடப்பு உலகக்கோப்பையில் வீரர்கள் விளையாடுகிறார்களோ இல்லையோ,  அந்தளவிற்கு மழை நன்றாக விளையாடுகிறது. சவுதாம்ப்டனில் மழைக்கு வாய்ப்புள்ளது. ஆனால், கனமழையாக இருக்காது என்பது ஆறுதலான விஷயம்.

இந்தியாவை மிரட்டியது போல் வங்கதேசத்தையும் ஆப்கானிஸ்தான் மிரட்டுமா?

வி.ராமசுந்தரம்,

கிரிக்கெட் விமர்சகர், தொழிலதிபர்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP