பலம்பொருந்திய ஆஸ்திரேலியாவை கத்துக்குட்டியான ஆப்கானிஸ்தான் வீழ்த்துமா?

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகள் பற்றிய ஓர் அலசல்.
 | 

பலம்பொருந்திய ஆஸ்திரேலியாவை கத்துக்குட்டியான ஆப்கானிஸ்தான் வீழ்த்துமா?

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகள் பற்றிய ஓர் அலசல்.

ஆப்கானிஸ்தான்

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் டெஸ்ட் அந்தஸ்த்தை விரைவாகவே பிடித்த அணி ஆப்கானிஸ்தான். ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் சமீபகாலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் ஆப்கானிஸ்தான் இந்த உலகக்கோப்பையில் சவால் அளிக்கக்கூடிய அணியாகவே கருதப்படுகிறது.

அந்த அணியின் பலமே, அணியில் உள்ள ஸ்பின்னர்களான ரஷித் கான், முகமது நபி, முஜீபுர் ரஹ்மான் ஆகியோர்கள். இவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் மட்டுமில்லாமல், எல்லா அணிகளுக்கு எதிராகவும் மிரட்டுவார்கள்.

ஆப்கானிஸ்தான் அணியில் உலக தரம் வாய்ந்த ஸ்பின்னர்கள் வலுவாக இருந்தாலும், வேகப்பந்துவீச்சாளர்கள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. பேட்டிங்கும் சில போட்டிகளில் நன்றாகவும், மட்டமாகவும் இருக்கின்றன. உதாரணம் உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆடியதை பார்த்தால் தெரிந்துவிடும். அஷ்கர் அப்கான் கேப்டன்ஷிப்பில் நிறைய வெற்றிகளை கண்ட ஆப்கானிஸ்தான் குல்படின் நைப் கேப்டன்சியில் களமிறங்குகிறது. 

ஆஸ்திரேலியா

உலகக்கோப்பையை வெல்லக்கூடிய அணியாக ஆஸ்திரேலியா இருக்கும் என 6 மாதமாக தான் கூறப்பட்டு வருகிறது. அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள். டேவிட் வார்னர், ஸ்மித் அணிக்கு திரும்பியிருப்பது. கடந்த ஐபிஎல் தொடரில் இருவரின் சிறப்பான ஆட்டமும் ஆகும். அதிக உலகக்கோப்பை வென்ற அணி என்ற காரணத்தாலும் ஆஸ்திரேலியாவுக்கு கூடுதல் பலத்தை சேர்க்கும்.

ஆஸ்திரேலியா அணியில் பேட்டிங்கிற்கு வார்னர், ஸ்மித், மேக்ஸ்வெல் உள்ளிட்டோர்கள் உள்ளனர். பவுலிங்கிற்கு ஸ்டார்க், கம்மின்ஸ், நாதன் லயன், ஆடம் ஜம்பா இருக்கின்றனர். இதில், கம்மின்ஸ் கடைசியாக தான் ஆடிய சில ஆட்டங்களில்  17 விக்கெட்டுகளை சாய்த்து, நல்ல பவுலிங் சராசரியை வைத்துள்ளார்.

ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவே வென்றுள்ளன. இருப்பினும், சமீபகாலமாக ஆப்கானிஸ்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதுவும், வெளிநாடுகளில் நடந்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டனர். 

இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தான் வெற்றி பெரும் என்றாலும், ஆப்கானிஸ்தானை கத்துக்குட்டி அணி என்று கருதாமல் ஆஸ்திரேலியாவும், பலம் பொருந்திய ஆஸ்திரேலியாவை வீழ்த்துவோம் என்ற நம்பிக்கையுடன் ஆப்கானிஸ்தானும் மோதும் என்பதால், போட்டி விறுவிறுப்பாகவும் இருக்கும், இருக்காமலும் போகலாம்.

இந்த போட்டி பிரிஸ்டலில் இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.

 

வி .ராமசுந்தரம் 
தொழிலதிபர் மற்றும் கிரிக்கெட் விமர்சகர் 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP