தோனியை 7-ஆவது வீரராக களமிறக்கியது ஏன்? ரவிசாஸ்திரி மீது கங்குலி பாய்ச்சல்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தோனியை 7-ஆவது வீரராக களமிறக்கியது ஏன் என்று கேள்வி எழுப்பிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி முடிவை கடுமையாக சாடியுள்ளார்.
 | 

தோனியை 7-ஆவது வீரராக களமிறக்கியது ஏன்? ரவிசாஸ்திரி மீது கங்குலி பாய்ச்சல்

'உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில், நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், இந்திய வீரர் மஹேந்திர சிங் தோனியை 7-ஆவது வீரராக களமிறக்கியது ஏன்?' என்று கேள்வி எழுப்பிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி முடிவை கடுமையாக சாடியுள்ளார்.

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி வெல்லும் என்ற ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் நம்பிக்கையை, நியூசிலாந்து அணி தகர்த்தெறிந்தது. அந்த அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், 240 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து, உலகக்கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியது.

நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி  6 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து, தடுமாறியபோது, தோனி - ஜடேஜா கூட்டணியால் 200 ரன்களை கடந்து போராடி தோல்வி அடைந்தது.

இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான அரை இறுதிப்போட்டியில் தோனியை 7-ஆவது வீரராக களமிறக்கியது தொடர்பாக கிரிக்கெட் வல்லுநர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். 

இதுதொடர்பாக, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியும் விமர்சனம் செய்து, அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.  

இந்திய அணி  6 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து, தடுமாறியபோது, அடுத்து தோனியை களமிறக்காமல் தினேஷ் கார்த்திக்கை ஏன் களமிறக்கினீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். 4-வது வீரராக தோனியை களமிறக்கியிருந்தால் விக்கெட் சரிவை தோனி தடுத்து நிறுத்தி இருப்பார் என்றும், பண்ட் உடன் தோனி ஜோடி சேர்ந்து ஆடியிருந்தால் பண்ட்டின் தவறான ஷாட் முடிவை அனுபவம் வாய்ந்த வீரரான தோனி தடுத்து நிறுத்தியிருப்பார் என்றும் கங்குலி தெரிவித்துள்ளார்.

மேலும்,  ‘ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக் கடைசி கட்டத்தில் அடித்து ஆடக்கூடியவர்கள். தோனிக்கு முன்பாக இவர்களை களமிறக்கியது தவறு, சேஸ் செய்யும் கட்டத்தில் தோனியை 4-வது வீரராக களமிறக்காமல் 7-ஆவது வீரராக களமிறக்கிய முடிவு தவறானது. இந்த விஷயத்தில் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி எதை நினைத்து இப்படி செய்தார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், இது மிகப்பெரிய தவறு' என்று கங்குலி விமர்சித்துள்ளார். 

தோனியை 7-ஆவது வீரராக களமிறக்கியது ஏன்? ரவிசாஸ்திரி மீது கங்குலி பாய்ச்சல்

வி.ராமசுந்தரம்

தொழிலதிபர், கிரிக்கெட் விமர்சகர்

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP