வெஸ்ட் இண்டீஸ் Vs இங்கிலாந்து : இன்னைக்கு வெயிட் காட்டப்போவது யாரு?

ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள இங்கிலாந்து அணி... தகுதிச் சுற்று போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலமே உலகக்கோப்பை தொடருக்குள் நுழைந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி... என இரு வேறு துருவங்கள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
 | 

வெஸ்ட் இண்டீஸ் Vs இங்கிலாந்து : இன்னைக்கு வெயிட் காட்டப்போவது யாரு?

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள இங்கிலாந்து அணி... தகுதிச் சுற்று போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலமே உலகக்கோப்பை தொடருக்குள் நுழைந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி... என இரு வேறு துருவங்கள், இங்கிலாந்தின் சௌதாம்டன் நகரில் உள்ள ரோஸ் பௌல் மைதானத்தில் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஜேசன் ராய், பேரிஸ்டாவ், ஜோ ரூட், ஜோஸ் பட்லர் , பென் ஸ்ட்ரோக் என மிரட்டும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் ஜம்பம், வெஸ்ட் இண்டீஸ் அணியின்  ஓசன் தாமஸ், ஷெல்டன் காட்ரல் போன்றவர்களின் அதிரடி வேகப்பந்து வீ்ச்சுக்கு முன் பலிக்குமா? என்பது இன்று தெரிந்துவிடும்.

வெண்ட் இண்டீஸின்  அதிரடி துவக்க ஆட்டக்காரரான கிறிஸ் கெயில், இங்கிலாந்துக்கு எதிராக எப்போதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது, அந்த அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும். ஆன்ட்ரூ ரசூல் இன்றைய போட்டியில் இடம்பெறும் பட்சத்தில், அவர் நின்று விளையாடி அதிரடியை காட்டினால் இங்கிலாந்துக்கு நெருக்கடிதான்.

வெஸ்ட் இண்டீஸ் Vs இங்கிலாந்து : இன்னைக்கு வெயிட் காட்டப்போவது யாரு?

ரோஸ் பௌல் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம் என்பதால், டாஸ் வெல்லும் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது தான் கெட்டிக்காரத்தனம்.

தென்னாப்பிரிக்கா, வங்கதேச அணிகளுடன்  அபராத வெற்றி... பாகிஸ்தானுடன் மட்டும் தோல்வி.. என உலகக்கோப்பை தொடரில் இதுவரை தான் விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று, பேட்டிங்கில் பட்டையை கிளப்பும் இங்கிலாந்து அணி...

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி... ஆஸ்திரேலியா உடனான ஜெயிக்க வேண்டிய போட்டியை கோட்டைவிட்டது..என இதுவரை தாம் விளையாடியுள்ள இரு போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டுள்ள வெஸ்ட் இண்டீஸ்  அணி... என  சமபலம் பொருந்திய  இரு அணிகள் மோதும் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம்... பார்ப்போம்... கலக்கப் போவது யாருன்னு?

மேட்ச் நடைபெற்றுவரும் சௌதாம்டனில் இன்னைக்கு மழை பெய்யக்கூடாதுன்னு வருண பகவானை எல்லாரும் வேண்டிக்கிட்டு வாங்க... மேட்ச் பார்க்கலாம்...

வி.ராமசுந்தரம்,

தொழிலதிபர், கிரிக்கெட் விமர்சகர்

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP