வெஸ்ட் இண்டீஸ் டூர் : இந்திய அணியில் தோனி, பாண்டியா அவுட் ...  அஸ்வின், மணீஷ் பாண்டே இன்...

இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான பும்ராவுக்கு, டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.எஸ்.தோனி, சுயவிருப்பத்தின் பெயரில் மேற்கிந்திய தீவுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணியில் இடம்பெறவில்லை.
 | 

வெஸ்ட் இண்டீஸ் டூர் : இந்திய அணியில் தோனி, பாண்டியா அவுட் ...  அஸ்வின், மணீஷ் பாண்டே இன்...

இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு விரைவில் பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் மற்றும்  3 டி20 ஆட்டங்களில் இந்திய அணி விளையாட உள்ளது. இதற்கான அணி வீரர்கள் விவரத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்று அறிவித்துள்ளது.

இதில், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டும் விராட் கோலி தான் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக, உலகக்கோப்பை தொடரிலிருந்து பாதியிலேயே விலகிய ஷிகர் தவான் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.

இதேபோன்று, மணீஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், அஸ்வின் உள்ளிட்டோருக்கு அணியில்   மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், முரளி விஜய் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

மேலும், இந்திய அணியின்  நட்சத்திர பந்துவீச்சாளரான பும்ராவுக்கு, டெஸ்ட் போட்டிகளில்  மட்டும் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணியில் சுயவிருப்பத்தின் பெயரில்  எம்.எஸ்.தோனி  இடம்பெறவில்லை. முதுகுவலி காரணமான இளம் ஆல்-ரவுண்டரான ஹர்த்திக் பாண்டியாவும் அணியில் இடம்பெறவில்லை.

டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விவரம்:

விராட் கோலி (கேப்டன்),  ரஹாணே (துணை கேப்டன்), மயங்க் அகர்வால், கே.எல்,ராகுல், சி.புஜாரா, ஹனுமா விஹாரி, ரோஹித் சர்மா,  ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஆர். அஸ்வின், ரவீந்திர ஜேடஜா, குப்தீப் யாதவ், இசாந்த் சர்மா, முகமது சமி, ஜஸ்பிரிட் பும்ரா, உமேஷ் யாதவ்.

ஒருநாள் போட்டி தொடருக்கான அணி விவரம்:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா ( துணை கேப்டன்),  ஷிகர் தவான், கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷப் ஃபண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜேடஜா,, குல்தீப் யாதவ், யுஜேந்திரா சாஹல், கேதார் ஜாதவ், முகமது சமி, புவனேஷ்வர் குமார், கலீல் அஹமது, நவ்தீப் சைனி.

டி-20 போட்டி தொடருக்கான அணி விவரம்:

கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷப் ஃபண்ட் (விக்கெட் கீப்பர்), குருணால் பாண்டியா, ரவீந்திர ஜேடஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, தீபக் சாஹர், நவ்தீப் சைனி.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP