நாங்க அப்படியும் ஆடுவோம், இப்படியும் ஆடுவோம்: பாகிஸ்தான் 348 ரன்கள் குவிப்பு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்துக்கு 349 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 | 

நாங்க அப்படியும் ஆடுவோம், இப்படியும் ஆடுவோம்: பாகிஸ்தான் 348 ரன்கள் குவிப்பு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில்  இங்கிலாந்துக்கு 349 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாட்டிங்காமில் தற்போது நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து, பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இமாம் உல் ஹக், பாக்கர் ஸாமன் களமிறங்கினார்கள். இருவரும் நல்ல தொடக்கத்தை அமைத்துவிட்டு சென்றனர். 

14.1 ஓவர்களில்தான் (82 ரன்கள்) முதல்  விக்கெட்டே விழுந்தது. பாக்கர் ஸாமன் (36 ரன்கள்) விக்கெட்டை மொயின் அலி சாய்த்தார். சிறிது நேரத்திலேயே இமாம் உல் ஹக்கின் (44 ரன்கள்) விக்கெட்டையும் மொயின் அலி எடுத்தார். இதன்பின்னர், பாபர், ஹபீஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில், ஹபீஸ் அதிரடியாக ஆடி, இங்கிலாந்து பவுலர்களை திணறடித்தார். பாபர் 63 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, களமிறங்கிய கேப்டன் சர்ப்ராஸ், ஹபீசுடன் கூட்டுச்சேர்ந்து, இருவரும் அதிரடி காட்டியதால், பாகிஸ்தானின் ஸ்கோர் மளமளவென ஏறியது. பின்னர், ஹபீஸின் விக்கெட்டை மார்க்வுட் வீழ்த்தினார். கேப்டன் சர்ப்ராஸ் 55 ரன்களில் ஆட்டமிழந்தார். அசிப் அலி 14, சோயிப் மாலிக் 8, வஹாப் ரியாஸ் 4 ரன் என வந்தவேகத்திலேயே பெவிலியன் திரும்பினர். 

பின்னர் 50 ஓவர்களின் முடிவில் பாகிஸ்தான் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 348 ரன்கள் குவித்து, இங்கிலாந்துக்கு வெற்றி இலக்காக 349 ரன்களை நிர்ணயித்துள்ளது. உலகக்கோப்பையில் பாகிஸ்தானின் 2-ஆவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஹபீஸ் 84, பாபர் அசாம் 63, சர்ப்ராஸ் 55 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில், வோக்ஸ், மொயின் அலி தலா 3 விக்கெட்டுகளும், மார்க்வுட் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் பவுன்சர் பந்துகளில் மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்த பாகிஸ்தான்,  இந்த போட்டியில் வீசப்பட்ட பவுன்சர் பந்துகளை திறம்பட எதிர்கொண்டது. 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP