வங்கதேசத்துக்கு எதிரான வெற்றி....கொண்டாட வேண்டிய வெற்றி.....!

நாக்பூரில் வங்கதேச அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்த வெற்றியை வீர்ர்கள், ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
 | 

வங்கதேசத்துக்கு எதிரான வெற்றி....கொண்டாட வேண்டிய வெற்றி.....!

நாக்பூரில் வங்கதேச அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்த வெற்றியை வீர்ர்கள், ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

கடைசி மற்றும் 3ஆவது டி20 போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கி ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்தது. 175 இலக்கை துரத்தி ஆடிய வங்கதேசம் 19.2 ஓவர்களில் 144 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்த போட்டியில் வங்கதேச அணியே வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த அணி 12.5 ஓவர்கள் வரை 112 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடி கொண்டிருந்தது. வெற்றிக்கு 43 பந்துகளில் 65 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால், சாஹர் வீசிய 12ஆவது ஓவரின் கடைசி பந்து ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது. அந்த பந்தில் மிதுன் விக்கெட் விழ, அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே துபே, ரஹீமை வீழ்த்தி டி20 யில் தனது முதல் விக்கெட்டை எடுத்தார். ரஹீமின் விக்கெட் போனதும் அந்த அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை சிறிது குறைந்தது.

துபேயின் இன்னொரு (15 ஓவர்)  ஓவரில் அதிரடியாக ஆடி அச்சுறுத்தி வந்த நைம்மின் விக்கெட் விழுந்ததால் வங்கதேசத்தின் நம்பிக்கை மொத்தமும் போனது. அந்த அடுத்த பந்திலேயே அபிப் ஹூசைன் விக்கெட்டும் வீழ்ந்தது.

இந்த போட்டியில் ஜொலித்த வீரர் என்றால் அது சாஹர் தான், ஹாட்ரின் விக்கெட் மற்றும் 3.2 ஓவர்கள் வீசி 7 ரன்கள் விட்டுக்கொடுத்து உலக சாதனை படைத்தார் அவர். இலங்கையின் அஜந்தா மெண்டிஸ் 6 விக்கெட்டுக்கு  8 ரன்கள் விட்டுக்கொடுத்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடைசி கட்டத்தில் 34 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது வங்கதேசம்.

ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ராகுல் ஆகியோர் வங்கதேச பவுலர்களின் பந்துவீச்சை அடித்து நொறுக்கி ரன்களைக் குவித்தனர். அவர்களால் தான் 174 ரன்களை எடுக்க முடிந்தது. கலீல் மற்றும் ரிஷாப் பந்த் உள்ளூர் போட்டிகளில் விளையாடி தங்களது திறமையை வெளிகாட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

ரோஹித் மற்றும் அணியின் நம்பிக்கையும், மனஉறுதியும் தொடரை வெல்லவைத்துள்ளது.

தீபக் சாஹர், ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் நைம் ஆகியோரை வாழ்த்துவோம்...முக்கியமான போட்டியில் தங்களின் திறமையை சரியான நேரத்தில் வெளி கொண்டு வந்ததற்கு.

வங்கதேசத்துக்கு எதிரான வெற்றி....கொண்டாட வேண்டிய வெற்றி.....!

வி.ராமசுந்தரம்,

தொழிலதிபர், கிரிக்கெட் விமர்சகர்.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP