ஹர்பஜனுக்கு விருது வழங்க மத்திய அமைச்சகம் மறுப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்குக்கு, விளையாட்டு துறையில் வழங்கப்படும் உயரிய விருதான கேல் ரத்னா வழங்க, மத்திய அரசு மறுத்துவிட்டது.
 | 

சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற வகையில் அவரின் பெயர் கேல் ரத்னா விருதுக்கு முன்மாெழியப்பட்ட நிலையில், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் அதை ஏற்க மறுத்துவிட்டது.

அதே போல், ஒடிசாவை சேர்ந்த, பிரபல தடகள வீராங்கனை துாதே சந்தின் டூடி சந்துக்கு அர்ஜுனா விருது வழங்க பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பமும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அவரின் விண்ணப்பத்தின் போதிய விபரங்கள் இல்லை எனவும், விருதுக்கு தகுதியுடையோர் பட்டியலில், அவர் 5ம் இடத்தில் இருப்பதால், அவர் பெயரை பரிந்துரைத்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும் மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP