3ஆவது நாள் ஆட்டம் முடிந்தது:  ‘கம் பேக்’ அஸ்வின் 

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், தென்னாப்பிரிக்கா 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 385 ரன்களை எடுத்துள்ளது.
 | 

3ஆவது நாள் ஆட்டம் முடிந்தது:  ‘கம் பேக்’ அஸ்வின் 

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், தென்னாப்பிரிக்கா  8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 385 ரன்களை எடுத்துள்ளது.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்சில் 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை ஆடி வரும், தென்னாப்பிரிக்கா அணியில் இன்று எல்கர், டி காக் அபாரமாக சதம் அடித்து ரன்குவிப்பில் அணியை தூக்கி நிறுத்தினர். கேப்டன் டு பிளிசஸ் தன் பங்கிற்கு அரைசதம் அடித்தார்.

3ஆவது நாள் ஆட்டம் முடிந்தது:  ‘கம் பேக்’ அஸ்வின் 

மேலும், எல்கரின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது 200ஆவது விக்கெட்டை ஜடேஜா பதிவு செய்துள்ளார். 
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு மறுக்கப்பட்ட அஸ்வின் இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார்.  ஜடேஜா 2, இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இந்திய அணியை விட தென்னாப்பிரிக்கா 117 ரன்கள் பின் தங்கியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP