தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: பும்ரா அவுட்; உமேஷ் யாதவ் இன்...!

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ஜஸ்பிரீத் பும்ரா காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
 | 

இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘அக்டோபர் 2 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான உள்நாட்டு தொடருக்கான இந்தியாவின் டெஸ்ட் அணியில்  பும்ராவுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளார் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். பும்ராவிற்கு முதுகில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், இந்த தொடரில் இருந்து அவர் விலக்கப்பட்டுள்ளார்.

 உமேஷ் யாதவ் கடைசியாக 2018 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது டெஸ்ட் போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா -தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 2ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP