ஆஸ்திரேலியா ஓபன்: சாம்பியன் பட்டம் வென்றார் வோஸ்னியாகி

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் பிரிவில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் ஹலெப்பை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் வோஸ்னியாகி.
 | 

ஆஸ்திரேலியா ஓபன்: சாம்பியன் பட்டம் வென்றார் வோஸ்னியாகி

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் பிரிவில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் ஹலெப்பை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் வோஸ்னியாகி.

ஆஸ்திரேலிய ஒப்ன் டென்னஸ் இறுதிப் போட்டி இன்று நடந்தது. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில், முதல் செட்டை வென்றார் டென்மார்க்கைச் சேர்ந்த வோஸ்னியாகி. ஆனால் அடுத்த சுற்றில் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் ஹலெப். அவர் அந்தச் சுற்றை 6-3 என வென்றார். அதற்கு அடுத்த சுற்றில் வோஸ்னியாகி சுதாரித்து ஆடினார். இதனால், 6-7, 6-3, 4-6 என்ற செட் கணக்கில் வோஸ்னியாகி வெற்றிபெற்று ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். வெற்றிபெற்ற உடன் டென்னிஸ் கோர்ட்டில் அப்படியே மல்லாந்து விழுந்து அழுதார் வோஸ்னியாகி.

வோஸ்னியாகிக்கு பெற்ற முதல் கிரான்ட்ஸ்லாம் பட்டம் இதுதான். வெற்றி பெற்றது குறித்து அவர் கூறுகையில், "இந்த தருணத்துக்காகத்தான் காத்திருந்தேன். என்னால் வெற்றி பெற்றதை நம்பவே முடியவில்லை. அழவேண்டும் என்று தோன்றுகிறது... அழப்போகிறேன்" என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP