விம்பிள்டன் ஓபன்: ரோஜர் பெடரர், செரீனா வில்லியம்ஸ் வெற்றி

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் துவக்க ஆட்டத்தில் ரோஜர் பெடரர், செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றனர்.
 | 

விம்பிள்டன் ஓபன்: ரோஜர் பெடரர், செரீனா வில்லியம்ஸ் வெற்றி

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் துவக்க ஆட்டத்தில் ரோஜர் பெடரர், செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றனர். 

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிகவும் உயரியதாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடரின் துவக்க போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில், 2ம் இடத்தில் இருக்கும் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், செர்பியாவின் டுஷன் லாஜுவிக்கை எதிர்கொண்டார். 79 நிமிடம் நடந்த இப்போட்டியில் பெடரர் 6-1, 6-3, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார். 

2-வது சுற்றில் ஸ்லோவாகியாவின் லூகாஸ் லாக்கோவை சந்திக்கிறார் பெடரர். 8 முறை விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த பெடரர், 9-வது பட்டத்தை கைப்பற்ற முயற்சித்து வருகிறார். 

மற்ற ஆட்டங்களில், நோவக் ஜோகோவிச், மரின் சிலிக், ஸ்டான் வாவ்ரிங்கா உள்ளிட்டோர் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் கண்டனர்.

மகளிர் பிரிவில், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 7-5, 6-3 என்ற கணக்கில் டச் வீராங்கனை அரண்ட்க்சா ரஸை வீழ்த்தினார். அடுத்த சுற்று ஆட்டத்தில் செரீனா, பல்கேரியாவின் விக்டோரியா டொமோவாவை எதிர்கொள்கிறார்.

7 முறை சாம்பியனான செரீனா, கர்ப்பமாக இருந்த காரணத்தினால், கடந்த ஆண்டு போட்டியில் பங்கேற்கவில்லை. இந்த முறை தனது 8-வது பட்டத்தை கைப்பற்றி, செரீனா சாதனை படைப்பாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற போட்டிகளில், வீனஸ் வில்லியம்ஸ், மேடிசன் கீஸ், கரோலினா பிளிஸ்க்கோவா, கரோலின் வோஸ்னியாக்கி உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகளும், 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP