விம்பிள்டன் ஓபன்: 3-வது சுற்றில் நடால், ஜோகோவிச்

முன்னாள் சாம்பியன் ரஃபேல் நடால் மற்றும் நோவக் ஜோகோவிச், விம்பிள்டன் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
 | 

விம்பிள்டன் ஓபன்: 3-வது சுற்றில் நடால், ஜோகோவிச்

முன்னாள் சாம்பியன் ரஃபேல் நடால் மற்றும் நோவக் ஜோகோவிச், விம்பிள்டன் 3-வது சுற்றுக்கு முன்னேறினர். 

விம்பிள்டன் போட்டியின் 2-வது சுற்றில் நம்பர் ஒன் வீரர் ரஃபேல் நடால்  6-4, 6-3, 6-4 என்ற நேர்செட் கணக்கில் கஜகஸ்தானின் மிகைல் முகுகுஷிக்கின்னை வென்றார். 3-வது சுற்றில் நடால், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மின்னுயரை எதிர்கொள்ள இருக்கிறார். 

3 முறை சாம்பியனான நோவக் ஜோகோவிச் 6-1, 6-2, 6-3 என்ற கணக்கில் அர்ஜென்டினாவின் ஹோரசியோ ஸிபல்லோஸை தோற்கடித்தார். அடுத்த சுற்றில் அமெரிக்காவின் கயலே எட்மண்ட்டுடன், ஜோகோவிச் மோதுகிறார். 

இவர்களை தவிர, கெய் நிஷிகோரி, டெல் போட்ரோ, போக்னினி, நிக் கிர்ஜியோஸ் ஆகியோரும் 3-வது சுற்றை எட்டினர். 

மகளிர் பிரிவில், சிமோனா ஹாலேப், கேரிபேர், செரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ், பார்போரா ஸ்ட்ரிகோவா, மகரோவா, மேடிசன் கீஸ், பிளிஸ்க்கோவா, ஒஸ்டாபென்கோ ஆகியோர் மூன்றாவது சுற்றுக்கு தகுதி அடைந்தனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP