அமெரிக்கா ஓபன்: ஆன்டி முர்ரே வெளியேற்றம்

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே வெளியேற்றப்பட்டார்.
 | 

அமெரிக்கா ஓபன்: ஆன்டி முர்ரே வெளியேற்றம்

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே வெளியேற்றப்பட்டார். 

நியூயார்க் நகரில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்று ஆட்டத்தில், இங்கிலாந்தின் முர்ரே, ஸ்பெயினின் பெர்னாண்டோ வெர்டாஸ்கோவை எதிர்கொண்டார். 3 மணி நேரம் 30 நிமிடங்கள் நடந்த இப்போட்டியில் வெர்டாஸ்கோ 7-5, 2-6, 6-4, 6-4 என்ற கணக்கில் முர்ரேவை வென்றார். 

2012ம் ஆண்டு யுஎஸ் சாம்பியனான முர்ரே, இடுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிறகு, அதில் இருந்து மீண்டு வர கடுமையாக முயற்சி செய்து வருகிறார். இருப்பினும் அறுவை சிகிச்சைக்கு பிறகு, இதுவே தனது சிறந்த ஆட்டம் என்று முர்ரே தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP