யுஎஸ் ஓபன்: ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி

ஆடவர் பிரிவில், 5 முறை சாம்பியன் ரோஜர் பெடரர் - ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மனுடன் மோதினார். 55ம் இடம் வகிக்கும் மில்மன் 3-6, 7-5, 7-6 (9-7), 7-6 (7-3) என்ற கணக்கில் வெற்றி பெற்று, பெடரருக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
 | 

யுஎஸ் ஓபன்: ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் அதிர்ச்சி தோல்விக்குள்ளாகி நம்பர் 2 வீரர் ரோஜர் பெடரர் வெளியேறினார். 

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபன் நடந்து வருகிறது. இதில் இன்று ஆடவர் பிரிவில் நடந்த நான்காவது சுற்று ஆட்டத்தில், 5 முறை சாம்பியன் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் - ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மனுடன் மோதினார். 55ம் இடம் வகிக்கும் மில்மன் 3-6, 7-5, 7-6 (9-7), 7-6 (7-3) என்ற கணக்கில் வெற்றி பெற்று, பெடரருக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதனால் காலிறுதிச் சுற்றில் மில்மன், நோவக் ஜோகோவிச்சுடன் மோத இருக்கிறார். 

மில்மன், ஜோகோவிச்சை தவிர நடால், தியம், இஸ்னர், டெல் பொட்ரோ, நிஷிகோரி, மரின் சிலிக் ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேற்றம் கண்டுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP