அமெரிக்கா ஓபன்: நம்பர் ஒன் நடால் காலிறுதிக்கு முன்னேறினார்

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் ரஃபேல் நடால். ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் நடால், 6-3, 6-3, 6-7 (6/8), 6-4 என ஜார்ஜியாவின் நிகோலஸ் பசிலஷ்விலியை வீழ்த்தினார்.
 | 

அமெரிக்கா ஓபன்: நம்பர் ஒன் நடால் காலிறுதிக்கு முன்னேறினார்

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் ரஃபேல் நடால். 

நியூயார்க் மகளிர் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நடைபெற்று வருகிறது. ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் நடால், 6-3, 6-3, 6-7 (6/8), 6-4 என்ற நேர்செட் கணக்கில் ஜார்ஜியாவின் நிகோலஸ் பசிலஷ்விலியை வீழ்த்தினார். இதனால் காலிறுதிச் சுற்றில் நடால், 9ம் இடம் வகிக்கும் ஆஸ்திரியாவின் டொமினிக் தியமை எதிர்கொள்கிறார். 

2010, 2014 மற்றும் 2017ம் ஆண்டு சாம்பியனான நடால், இது தனக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று கூறினார்.

மற்ற ஆட்டங்களில், அமெரிக்காவின் ஜான் இஸ்னர், அர்ஜென்டினாவின் டெல் பொட்ரோ ஆகியோர் காலிறுதிக்கு முன்னேற்றம் அடைந்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP