யுஎஸ் ஓபன்: நம்பர் 2 பெடரர் இன்; வோஸ்னியாக்கி அவுட்

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் 2 வீரர் ரோஜர் பெடரர் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மூன்றாவது சுற்று ஆட்டத்தில் ரோஜர் பெடரர், ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோசுடன் மோதுகிறார்.
 | 

யுஎஸ் ஓபன்: நம்பர் 2 பெடரர் இன்; வோஸ்னியாக்கி அவுட்

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் 2 வீரர் ரோஜர் பெடரர் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. ஆடவர் ஒற்றையர் பிரிவில், நம்பர் 2 வீரர் பெடரர் 7-5, 6-4, 6-4 என்ற கணக்கில் பிரான்சின் பெனாய்ட் பைரேவை வென்றார். மூன்றாவது சுற்று ஆட்டத்தில் பெடரர், ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோசுடன் மோதுகிறார். 

மகளிர் ஒற்றையர் பிரிவில், நம்பர் 2 வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கியை, 6-4, 6-2 என 36ம் இடம் வகிக்கும் உக்ரைனின் லேசியா சுரென்கோ வென்றார். நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலேப் துவக்கப் போட்டியில் தோல்வி அடைந்த பிறகு, 2ம் இடம் வகிக்கும் வோஸ்னியாக்கியும் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP