டாப்-8 வீரர்கள் பங்கேற்கும் டென்னிஸ்: லண்டனில் இன்று தொடக்கம்

டாப்–8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதி சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது. இன்று நடைபெறவிருக்கும் முதல் ஆட்டத்தில் ஆண்டர்சன்–டொமினிக் திம், பெடரர்–நிஷிகோரி ஆகியோர் மோதுகின்றனர்.
 | 

டாப்-8 வீரர்கள் பங்கேற்கும் டென்னிஸ்: லண்டனில் இன்று தொடக்கம்

டாப்–8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதி சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது. 

லண்டனில் இன்று தொடங்கி 18ஆம் தேதி வரை நடைபெறவுள்ள டாப்–8 வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதி சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், 2–ம் நிலை ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் காயம் காரணமாக விலகியதால் அவருக்கு பதிலாக அமெரிக்காவின் ஜான் இஸ்னர் சேர்க்கப்பட்டார்.

முன்னாள் வீரர்கள் குகா குயர்டன், லெய்டன் ஹெவிட் ஆகிய இரு முன்னாள் வீரர்களின் பெயரில் குரூப் பிரிக்கப்பட்டு, நோவக் ஜோகோவிச் (செர்பியா), மரின் சிலிச் (செர்பியா), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), ஜான் இஸ்னர் (அமெரிக்கா), ‘ஹெவிட்’ பிரிவில் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), டொமினிக் திம் (ஆஸ்திரியா), நிஷிகோரி (ஜப்பான்), கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு வீரர்களும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள்.

இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.61 கோடியாகும். போட்டி கட்டணமாக ரூ.1½ கோடி, லீக் சுற்றில் ஒவ்வொரு வெற்றிக்கும் ரூ.1½ கோடி வீதம் வழங்கப்படும். இறுதிப்போட்டி வெற்றிக்கு ரூ.9¼ கோடி அளிக்கப்படும். தோல்வியை சந்திக்காமல் கோப்பையைக் கைப்பற்றும் வீரர் மொத்தம் ரூ.19½ கோடியை பரிசாக வெல்ல வாய்ப்புண்டு. இதனுடன் 1,500 தரவரிசை புள்ளிகளும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
இன்று நடைபெறவிருக்கும் முதல் ஆட்டத்தில் ஆண்டர்சன்–டொமினிக் திம், பெடரர்–நிஷிகோரி ஆகியோர் மோதுகின்றனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP