டென்னிஸ் தரவரிசை: நம்பர் ஒன் இடத்தில் நீடிக்கிறார் சிமோனா ஹாலேப்

நேற்று கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபன் முடிவு பெற்றது. இறுதிச் சுற்று ஆட்டத்தில் முன்னாள் நம்பர் வீராங்கனை செரினா வில்லியம்சை 6-2, 6-4 என்ற கணக்கில் வீழ்த்தி ஜப்பானின் நவோமி ஒசாகா பட்டத்தை கைப்பற்றினார்.
 | 

டென்னிஸ் தரவரிசை: நம்பர் ஒன் இடத்தில் நீடிக்கிறார் சிமோனா ஹாலேப்

ரோமானியாவின் சிமோனா ஹாலேப் தொடர்ந்து சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் நீடித்து வருகிறார். 

நேற்று கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபன் முடிவு பெற்றது. இறுதிச் சுற்று ஆட்டத்தில் முன்னாள் நம்பர் வீராங்கனை செரினா வில்லியம்சை 6-2, 6-4 என்ற கணக்கில் வீழ்த்தி ஜப்பானின் நவோமி ஒசாகா பட்டத்தை கைப்பற்றினார். 

இந்த நிலையில் இன்று மகளிர் டென்னிஸ் சம்மேளனம் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ரோமானியாவின் சிமோனா ஹாலேப் முதலிடத்தில் நீடித்து வருகிறார். யுஎஸ் ஓபன் பட்டம் வென்ற ஒசாகா, 12 இடங்கள் ஏற்றம் கண்டு 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஜப்பானைச் சேர்ந்த போட்டியாளர் வென்ற முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். 

அமெரிக்காவின் ஸ்லோவானே ஸ்டீபன்ஸ் 6 இடங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு, 9-வது இடத்தில் உள்ளார். செக் குடியரசின் மார்கேடா வொன்றோஸோவா, 32 இடங்கள் ஏறி 71-வது இடத்தை பிடித்தார். 

மகளிர் டென்னிஸ் தரவரிசைப் பட்டியல்:

1. சிமோனா ஹாலேப் (ரோமானியா) 8,061 

2. கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 5,975

3. ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 5,425

4. கரோலின் கார்சியா (பிரான்ஸ்) 4,725

5. பெட்ரா கவிடோவா (செக் குடியரசு) 4,585

6. எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 4,555

7. நவோமி ஒசாகா (ஜப்பான்) 4,115

8. கரோலினா பிளிஸ்க்கோவா (செக் குடியரசு) 4,105

9. ஸ்லோவானே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 3,912

10. ஜெலினா ஒஸ்டாபென்கோ (லாத்வியா) 3,787

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP