பிரெஞ்சு ஓபன் காலிறுதிக்கு முன்னேறினார் சிமோனா ஹாலேப்

பிரெஞ்சு ஓபன் காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலேப்.
 | 

பிரெஞ்சு ஓபன் காலிறுதிக்கு முன்னேறினார் சிமோனா ஹாலேப்

பிரெஞ்சு ஓபன் காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலேப். 

பிரெஞ்சு ஓபன் பெண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்று ஆட்டத்தில், உலக நம்பர் ஒன் வீராங்கனை ரோமானியாவின் சிமோனா ஹாலேப் - பெல்ஜியமின் எல்லிஸ் மெர்டேன்ஸுடன் மோதினார். இதில் மெர்டேன்ஸை 6-2 6-1 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்திய சிமோனா, மூன்றாவது முறையாக பிரெஞ்சு ஓபன் காலிறுதிக்கு முன்னேறினார். 

அடுத்த போட்டியில் சிமோனா, கெர்பர் அல்லது கார்சியாவுடன் மோதுவார். 2014, 2017 ஆகிய ஆண்டுகளில் பிரெஞ்சு ஓபன் இறுதிச் சுற்று வரை எட்டியிருந்த சிமோனா, கோப்பையை கைப்பற்ற முடியாமல் போனது. இந்த முறை அவர் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை நோக்கி விளையாடி வருகிறார். 

மற்றொரு போட்டியில், உலகின் 2ம் இடத்தில் இருக்கும் டேனிஷின் வோஸ்னியாக்கியை 7-6(5), 6-3 என்ற கணக்கில் 14-வது இடத்தில் இருக்கும் ரஷ்யாவின் தரியா கசாட்க்கினா அதிர்ச்சி தோல்வி அடையச் செய்தார். இதன் மூலம், கசாட்க்கினா தனது முதல் கிராண்ட்ஸ்லாம் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP