ஷென்ஜென் ஓபன்: இறுதி போட்டிக்கான வாய்ப்பை இழந்தார் ஷரபோவா

ஷென்ஜென் ஓபன்: இறுதி போட்டிக்கான வாய்ப்பை இழந்தார் ஷரபோவா
 | 

ஷென்ஜென் ஓபன்: இறுதி போட்டிக்கான வாய்ப்பை இழந்தார் ஷரபோவா


சீனாவில் நடைபெற்று வரும் ஷென்ஜென் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து மரியா ஷரபோவா வெளியேற்றப்பட்டார். 

இன்று நடந்த அரையிறுதிப் போட்டியில், ரஷ்யாவின் ஷரபோவா- செக் குடியரசின் காடேரினா சினியாகோவாவை எதிர்கொண்டார். இதில், 6ம் நிலை வீராங்கனையான சினியாகோவா, 6-2, 3-6, 6-3 என்ற கணக்கில் ஷரபோவாவை வீழ்த்தி, இறுதிச் சுற்று போட்டிக்கு முன்னேறினார்.

பைனலில் உலக நம்பர் ஒன் வீராங்கனை சிமோன் ஹாலெப்புடன் சினியாகோவா மோதவுள்ளார். ஊக்கமருந்து சர்ச்சைக்கு பிறகு, ஷரபோவா இரண்டு முறை இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளார். ஷரபோவா, அடுத்த வாரம் டாப் 50 வீரர்- வீராங்கனைகள் பங்குபெறும் ஆஸ்திரேலியா ஓபன் போட்டியில் பங்கேற்க இருக்கிறார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP