ஆஸ்திரேலியா ஓப்பனில் இருந்து செரீனா வில்லியம்ஸ் விலகல்

ஆஸ்திரேலியா ஓப்பனில் இருந்து செரீனா வில்லியம்ஸ் விலகல்
 | 

ஆஸ்திரேலியா ஓப்பனில் இருந்து செரீனா வில்லியம்ஸ் விலகல்


நடப்பு சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் ஆஸ்திரேலியா ஓப்பனில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்தார். 

23 முறை கிராண்ட்ஸ்லாம்  பட்டங்களை வென்றுள்ள செரீனா, கடந்த மாதம் அபு தாபியில் நடைபெற்ற கண்காட்சி போட்டியில் தோல்வி அடைந்தார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா ஓப்பன் போட்டியில் சாம்பியனானதற்கு பின் ஓர் ஆண்டு போட்டிகளில் செரீனா பங்கேற்கவில்லை. போட்டியின் போது, கர்ப்பமாக இருந்த செரீனா, பிரசவத்திற்கு பிறகு மீண்டும் களம் கண்டுள்ளார். 

இந்நிலையில், "அபு தாபியில் போட்டியிட்டதற்கு பின், நான் விளையாடுவதற்கான தகுதியை நெருங்கியுள்ளேன். ஆனால், நான் நினைத்த அளவிற்கு இல்லை" என்று செரீனா கூறினார். "என்னுடைய பயிற்சியாளர் மற்றும் அணியினர் எப்போதும், நீ விளையாட தயாராக இருக்கும் போது தான் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிப்பது உண்டு. என்னால் போட்டியில் பங்கேற்க முடியும். ஆனால், நான் போட்டியில் மட்டும் பங்கேற்க விரும்பவில்லை. அதையும் தாண்டி எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவே விரும்புகிறேன். எனக்கு இன்னும் அவகாசம் தேவைப்படுகிறது" என்றும் செரீனா தெரிவித்தார்.

2011ம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியா ஓப்பன் போட்டியில் பங்கேற்று வரும் செரீனா, முதல்முறையாக போட்டியில் இருந்து விலகியுள்ளார். இவரை தவிர, முன்னணி வீரர்கள் ஆன்டி முர்ரே, நிஷிகோரி ஆகியோர் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினர். பெடரர், ஜோகோவிச் காயத்தால் அவதிப்பட்டு வருவதால், போட்டியில் பங்கேற்பது குறித்து இன்னும் உறுதியாக தெரியவில்லை. ஜனவரி 15ம் தேதி முதல் 23ந்தேதி வரை ஆஸ்திரேலியா ஓப்பன் போட்டி நடைபெற இருக்கிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP