உலக நம்பர் 1 வீராங்கனையை வீட்டுக்கு அனுப்பினார் செரீனா!

அமெரிக்க நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், ரவுண்ட் ஆப் 16 சுற்றில், ரொமேனியா நாட்டைச் சேர்ந்த உலக நம்பர் 1 வீராங்கனை சிமோனா ஹலெப்பை போராடி வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினார்.
 | 

அமெரிக்க நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற மார்கரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்வார் என பெருமளவு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், உலக நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹலெப்புடன் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் செரீனா மோதினார். 37 வயதான செரீனா, இந்த போட்டியில் வெற்றி பெற்றால், தொடரை வெல்வதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதால் இந்த போட்டியின் மீது கடும் எதிர்பார்ப்பு இருந்தது.

முதல் செட்டில் அசத்தலாக விளையாடிய செரினா 6-1 என்ற கணக்கில் அதிரடியாக முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டை ஹலெப் போராடி கைப்பற்றினார். மூன்றாவது செட்டில், இரு வீராங்கனைகளும் விடாமுயற்சி செய்து, போராடினர். கடைசியில் 6-4 என்ற கணக்கில் 3வது செட்டையும் போட்டியையும் செரீனா கைப்பற்றினார். "இது மிகவும் கடினமான போட்டி. பல அருமையான பாயிண்டுகளை இதில் பார்த்தோம். உலகின் நம்பர் 1 வீராங்கனையுடன் மோதியதால், என்னுடைய விளையாட்டை நான் அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்ல வேண்டி இருந்தது" என செரீனா கூறினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP