நடுவருடன் வாக்குவாதம்: விதிகளை மீறிய செரினாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

யு.எஸ் ஓபன் இறுதிப்போட்டியில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்கும், டென்னில் ராக்கெட்டை வீசிய காரணத்தினாலும் அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 | 

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றும் நவோமி ஒசாகா ஆகியோர்மோதினர். இதில் நவோமி 6-2, 6-4 எனும் நேர் செட் கணக்கில் செரினாவை வீழ்த்தினார். இந்த போட்டியின் போது நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செரினா வில்லியம்ஸ், அவரை திருடன் என்று வசைப்பாடினார். 

அதற்கு முன் அவர் போட்டியின் போது  அவரது பயிற்சியாளர் சைகை மூலம் ஆட்ட நுணுக்கம் பற்றி விவரித்தார். ஏடிபி போட்டிகளில் பார்வையாளர் வரிசையில் இருந்து பயிற்சியாளர் ஆலோசனைகள் தெரிவிக்கலாம். ஆனால் கிராண்ட்சிலாம் போட்டிகளில் அதற்கு அனுமதி இல்லை. பின் தனது டென்னிஸ் ராக்கெட்டை வீசி எறிந்தார். இதனால் நடுவர் செரினா மீது பெனால்டி நடவடிக்கை எடுத்து புள்ளியை குறைத்தார். 

இதனால் கோபமடைந்த செரினா, " நடுவர் ஒரு பொய்காரர். என்னிடம் இருந்து மன்னிப்பை எதிர்பார்க்கிறார். என்னுடைய புள்ளியை பறித்த அவர் ஒரு திருடர்" என்று திட்டினார். 

இது டென்னிஸ் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செரினாவின் இந்த நடவடிக்கைகளை கண்டித்துள்ள அமெரிக்க டென்னிஸ் சங்கம் அவருக்கு அபராதம் விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விதிமுறைகளை மீறிய செரினாவுக்கு மொத்தம் ரூ. 12 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இந்த போட்டியில் செரினாவுக்கு கிடைத்த பரிசு தொகை ரூ.13 கோடி.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP