ஓய்வுக்கு பின் தான் திருமணம், குழந்தையெல்லாம்: ரஃபேல் நடால்

திருமண வாழ்க்கை தன்னை திசைமாற்றி விடும் என்று ரஃபேல் நடால் தெரிவித்துள்ளார்.
 | 

ஓய்வுக்கு பின் தான் திருமணம், குழந்தையெல்லாம்: ரஃபேல் நடால்

திருமண வாழ்க்கை தன்னை திசைமாற்றி விடும் என்று ரஃபேல் நடால் தெரிவித்துள்ளார்.

டென்னிஸ் உலகின் களிமண் தரை நாயகன் ரஃபேல் நடால். முன்னணி வீரரான இவர் சமீபத்தில் பிரென்ச் ஓபன் போட்டியில் வெற்றி பெற்று 17வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார். அது அவரது 11வது பிரென்ச்  ஓபன் பட்டமும் கூட.

இப்படி சாதனைகளை புரிந்து வரும் நடால் சமீபத்தில் தனது சொந்த வாழ்க்கை பற்றி பேசி உள்ளார். தனது நீண்ட நாள் காதலியான மரியா பிரான்சிஸ்காவுடன் நடால் வாழ்ந்து வருகிறார்.

12 வருடங்களாக ஒன்றாக வாழும் அவர்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற கேள்விக்கு, "திருமண வாழ்க்கை டென்னிஸில் இருந்து திசைத்திருப்பிவிடும். நான் ஓய்வு பெரும் போது தான் திருமணம், குழந்தைபற்றி எல்லாம் யோசிப்பேன்"என்றார். 

சில மாதங்களுக்கு முன் அவர் 3 பிள்ளைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP