வெண்கலம் வென்ற தமிழகத்தின் ப்ரஜ்நேஷுக்கு ரூ.20 லட்சம் பரிசுத் தொகை

ஆசிய விளையாட்டுப் போட்டி டென்னிஸ் பிரிவில் வெண்கலம் வென்ற தமிழக வீரர் ப்ரஜ்நேஷ் குன்னேஸ்வரனுக்கு ரூ.20 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
 | 

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் டென்னிஸ் அரையிறுதிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 161ம் இடம் வகிக்கும் ப்ரஜ்நேஷ் குன்னேஸ்வரன் 2-6, 2-6 என 75ம் இடத்தில் உள்ள உஸ்பெகிஸ்தானின் டெனிஸ் இஸ்ஸ்டாமினிடம் தோல்வி கண்டார். இதனால் ப்ரஜ்நேஷுக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது. 

இந்தநிலையில், வெண்கலம் வென்ற தமிழக வீரர் ப்ரஜ்நேஷுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ரூ.20 லட்சம் பரிசுத் தொகையை அறிவித்துள்ளார்.

டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போப்பண்ணா - டிவிஜ் ஷரன் இணை தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP