யுஎஸ் ஓபன் அரையிறுதிக்கு முன்னேறி ஒசாகா, நிஷிகோரி சாதனை

நியூயார்க்கில் யுஎஸ் ஓபன் டென்னிஸ் காலிறுதி ஆட்டங்களில், மகளிர் பிரிவில் ஜப்பானின் நவோமி ஒசாகா 6-1, 6-1 என உக்ரைனின் லேசியா சுரென்கோவை தோற்கடித்தார். அரையிறுதியில் ஒசாகா, அமெரிக்காவின் மார்ட்டின் கீசுடன் மோதுகிறார்.
 | 

யுஎஸ் ஓபன் அரையிறுதிக்கு முன்னேறி ஒசாகா, நிஷிகோரி சாதனை

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில், முதன்முறையாக ஜப்பானைச் சேர்ந்த போட்டியாளர்கள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். 

நியூயார்க்கில் யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நடந்த காலிறுதி ஆட்டங்களில், மகளிர் பிரிவில் ஜப்பானின் நவோமி ஒசாகா 6-1, 6-1 என்ற நேர்செட்களில் உக்ரைனின் லேசியா சுரென்கோவை தோற்கடித்தார். அரையிறுதியில் ஒசாகா, அமெரிக்காவின் மார்ட்டின் கீசுடன் மோதுகிறார்.

இதே போல் ஆடவர் பிரிவில், ஜப்பானின் கெய் நிஷிகோரி 2-6, 6-4, 7-6 (5), 4-6, 6-4 என குரோஷியாவின் மரின் சிலிக்கை வீழ்த்தினார். அரையிறுதி ஆட்டத்தில் நிஷிகோரி, ஜோகோவிச்சுடன் மோத உள்ளார். 

யுஎஸ் ஓபன் அரையிறுதிக்கு முன்னேறி ஒசாகா, நிஷிகோரி சாதனை

ஜப்பானை சேர்ந்த போட்டியாளர்கள் இரு பிரிவிலும் அரையிறுதி போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதல்முறை. இதன் மூலம் நிஷிகோரி, ஒசாகா சாதனை படைத்ததுடன் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP