பிரெஞ்சு ஓபன் காலிறுதியில் நோவக் ஜோகோவிச்

பிரெஞ்சு ஓபன் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்.
 | 

பிரெஞ்சு ஓபன் காலிறுதியில் நோவக் ஜோகோவிச்

பிரெஞ்சு ஓபன் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்.

பாரிஸ் நகரில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில், நோவக் ஜோகோவிச் 6-3, 6-4, 6-2 என்ற நேர்செட் கணக்கில் ஸ்பெயினின் ஃபெர்னாண்டோ வெர்டாஸ்கோவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். காலிறுதியில் இத்தாலியின் மார்கோ செசின்டோவை, ஜோகோவிச் எதிர்கொள்கிறார். 

2016ம் ஆண்டு பிரெஞ்சு மற்றும் 12 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஜோகோவிச், 12-வது பிரெஞ்சு காலிறுதிக்குள் நுழைந்துள்ளார். மேலும், 40-வது முறையாக பிரதான போட்டிகளின் காலிறுதிச் சுற்றை அவர் எட்டினார். தவிர, களிமண் தரையில் அவர் பெற்ற 200-வது வெற்றி இதுவாகும். 

மற்றொரு ஆட்டத்தில், அமெரிக்காவின் அலெக்சாண்டர் ஸ்வேரெவ் 4-6, 7-6 (7-4), 2-6, 6-3, 6-3 என ரஷ்யாவின் கரேன் காச்சினோவை தோற்கடித்தார். இதன் மூலம், ஸ்வேரெவ் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். அடுத்த போட்டியில் ஆஸ்திரியாவின் டொமோனிக் தியமுதன், ஸ்வேரெவ் மோதுகிறார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP