நியூபோர்ட் ரன்னர்-அப்: சிறந்த தரவரிசைக்கு ராம்குமார் முன்னேற்றம்

நியூபோர்ட் ஓபன் டென்னிஸ் இறுதிச் சுற்று போட்டியை எட்டியிருந்த இந்தியாவின் ராம்குமார் ராமன்தான், ஏடிபி தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.
 | 

நியூபோர்ட் ரன்னர்-அப்: சிறந்த தரவரிசைக்கு ராம்குமார் முன்னேற்றம்

நியூபோர்ட் ஓபன் டென்னிஸ் இறுதிச் சுற்று போட்டியை எட்டியிருந்த இந்தியாவின் ராம்குமார் ராமன்தான், ஏடிபி தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார். 

ஏடிபி உலக தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. நடந்து முடிந்த ஹால் ஆஃப் ஃபேம் இறுதிச் சுற்றில், ரன்னர்-அப் ஆன இந்தியாவின் ராம்குமார், 46 இடங்கள் முன்னேறி, தன்னுடைய டென்னிஸ் வரலாற்றில் சிறந்த தரவரிசையான 115-வது இடத்தை பிடித்துள்ளார். ஏடிபி உலக டூர் போட்டியில், ராம்குமார் தனது முதல் இறுதிச் சுற்று ஆட்டத்தில் பங்கேற்றார். 

தவிர, 2011ம் ஆண்டுக்கு பிறகு ஏடிபி போட்டியில் இறுதிச் சுற்றை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். ஆனால், 20 ஆண்டுகளுக்கு பிறகு ஏடிபி பட்டத்தை பெறும் முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைக்க தவறினார் ராம்குமார். இருபது ஆண்டுகளுக்கு முன், ஏடிபி பட்டத்தை பயஸ் கைப்பற்றி இருந்தார். 

ஒரு இடம் இழந்து 86-வது இடத்தில் இருக்கும் யுகி பாம்ப்ரி, இந்திய தரப்பில் ஒற்றையர் பிரிவில் முன்னிலையில் இருக்கும் வீரராவார். இரண்டு இடங்கள் கீழிறிங்கிய பிரஜ்நேஷ் குன்னேஸ்வரன் 186-வது இடத்தில் உள்ளார். சுமித் நகல் 269-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். சாகேத் மைனேனி 339-வது (+18) மற்றும் அர்ஜுன் கதே 345-வது (+16) இடங்களை பிடித்துள்ளனர்.

இரட்டையர் பிரிவில், ரோஹன் போபண்ணா 27-வது இடத்தில் நீடிக்கிறார். டிவிஜ் ஷரன், லியாண்டர் பயஸ், புராவ் ராஜா ஆகியோர் 38-வது, 80-வது, 83-வது இடங்களின் முறையே பின் தள்ளியுள்ளனர். 

ஜீவன் நெடுஞ்செழியன், தன்னுடைய சிறந்த தவரிசையாக 87-வது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளார். இரட்டையர் பிரிவு கூட்டணி வீரர்களான ஸ்ரீராம் பாலாஜி 3 இடங்கள் முன்னேறி 96-வது, விஷ்ணு வர்தன் 6 இடங்கள் சரிந்து 98-வது இடத்திலும் உள்ளனர். 

மகளிர் ஒற்றையர் வரிசையில், அங்கிதா ரெய்னா டாப் 200-க்குள் மீண்டும் நுழைந்தார். கர்மா கவுர் தண்டி 16 இடங்கள் இறங்கி 232-வது இடத்தில் உள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP