ஆஸ்திரேலிய ஓபன்: அரையிறுதிக்கு எளிதாக முன்னேறினார் நடால்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் காலிறுதிப் போட்டியில், ஸ்பெயின் நட்சத்திரம் ரஃபேல் நடால், அமெரிக்காவின் பிரான்செஸ் டியபோவை 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
 | 

ஆஸ்திரேலிய ஓபன்: அரையிறுதிக்கு எளிதாக முன்னேறினார் நடால்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் காலிறுதிப் போட்டியில், உலகின் இரண்டாம் நிலை வீரரான ஸ்பெயின் நட்சத்திரம் ரஃபேல் நடால், அமெரிக்காவின் பிரான்செஸ் டியபோவை 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் கடந்த சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறிய நிலையில், பிரபல வீரர்கள் நடால், ஜோகோவிச் மற்றும் நிஷிகோரி மட்டுமே ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் எஞ்சியுள்ளனர். இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த உலகின் இரண்டாம் நிலை வீரர் ரஃபேல் நடால், இளம் அமெரிக்க வீரரான பிரான்செஸ் டியபோவுடன் மோதினார்.

டியபோவுக்கு எதிரான போட்டியில், நடால் துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தினார். அவரின் அனுபவத்திற்கும் வேகத்திற்கும் ஈடுகொடுக்க முடியாமல், 21 வயதேயான டியபோ தடுமாறினார். இறுதியில், 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் நடால் வெற்றி பெற்று, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP