ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டியில் நுழைந்தார் நடால்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில், உலகின் இரண்டாம் நிலை வீரரான நட்சத்திர வீரர் ரஃபேல் நடால், இளம் கிரேக்க வீரர் ஸ்டெபானோஸ் ட்சிட்சிபாஸை 6-2, 6-4, 6-0 என அபாரமாக வீழ்த்தி, இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார்.
 | 

ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டியில் நுழைந்தார் நடால்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில், உலகின் இரண்டாம் நிலை வீரரான ரஃபேல் நடால், இளம் கிரேக்க வீரர் ஸ்டெபானோஸ் ட்சிட்சிபாஸை 6-2, 6-4, 6-0 என அபாரமாக வீழ்த்தி, இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார்.

ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரில், நட்சத்திர வீரர் ரஃபேல் நடால், அட்டகாசமாக விளையாடி, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரரை நாக் அவுட் செய்த இளம் கிரேக்க வீரர் ஸ்டெபானோஸ் ட்சிட்சிபாஸுடன் நடால் மோதினார். இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அட்டகாசமாக விளையாடினார் நடால். 20 வயதேயான ட்சிட்சிபாஸ், நடாலின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் போட்டி முழுவதும் திணறினார்.

முதல் செட்டை 6-2 என கைப்பற்றிய நடால், இரண்டாவது செட்டில் ட்சிட்சிபாஸ் போராடி விளையாட, 6-4 என வென்றார். இறுதியில், மூன்றாவது செட்டை 6-0 என முழு வேகத்தில் கைப்பற்றி, நேர் செட்களில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் நடால். நாளை நடக்கும் மற்றொரு அரையிறுதிப் போட்டியில், நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச், பிரான்ஸ் நாட்டின் போல்லியுடன் மோதுகிறார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP