என்னுடைய பயணம் இப்போது தான் ஆரம்பமாகி உள்ளது- செரீனா வில்லியம்ஸ்

"என்னுடைய பயணம் இப்போது தான் ஆரம்பமாகி உள்ளது" என்று விம்பிள்டன் இறுதிச் சுற்றில் தோல்வி அடைந்த செரீனா வில்லியம்ஸ் கூறியுள்ளார்.
 | 

என்னுடைய பயணம் இப்போது தான் ஆரம்பமாகி உள்ளது- செரீனா வில்லியம்ஸ்

"என்னுடைய பயணம் இப்போது தான் ஆரம்பமாகி உள்ளது" என்று விம்பிள்டன் இறுதிச் சுற்றில் தோல்வி அடைந்த செரீனா வில்லியம்ஸ் கூறியுள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டனில், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ஜெர்மனின் ஏஞ்சலிக் கெர்பரிடம் மகுடத்தை இழந்தார். ஓராண்டு இடைவெளிக்கு பின் மீண்டும் களமிறங்கியுள்ள செரீனா, தனது இடத்தை பிடிக்க கடுமையாக போராடி வருகிறார். நீண்ட நாள் போராட்டத்துக்கு பிறகு, இந்த சீசனின் முதல் இறுதிச் சுற்று ஆட்டத்துக்கு தகுதி அடைந்த செரீனா, கெர்பரிடம் தோல்வி கண்டார்.   

இது குறித்து செரீனா கூறுகையில், "அனைத்து தாய்மார்களுக்கும் நான் ஒன்று சொல்ல விரும்புவது என்னவென்றால், கம்பேக் என்பது அத்தனை எளிதானது அல்ல. மிகவும் கடினமானது. குழந்தை இருந்தாலே, நம்மளுடைய முழு பணி அவர்களை பார்த்துக் கொள்வதாக தான் இருக்கும். அதில் இருந்து மீண்டும் நாம் விரும்பும் பணிக்கு திரும்ப எவரேனும் ஆசைப்பட்டால், நான் சொல்கிறேன்.. உங்களால் முடியும், நிச்சயம் உங்களால் அதை செய்ய முடியும். 

இந்த இரண்டு வாரம்.. இப்போட்டி எனக்கு உணர்த்தியது.. என்னால் இதனை செய்ய முடியும் என்பதே. ஆனால், மனரீதியாக நான் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற போராடிக் கொண்டிருக்கிறேன். நான் என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறேன். விம்பிள்டனில் எனது பெரிய படியை எடுத்து வைத்துள்ளேன். என்னுடைய பயணம் இப்போது தான் ஆரம்பமாகி உள்ளது" என்றார்.

சாம்பியன் பட்டம் வென்ற கெர்பர் தெரிவிக்கையில், "ஒரு போட்டியை வென்றதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். நான் வெற்றி பெற்றுள்ளேன். அதே நேரம் செரீனா தோல்வி அடையவில்லை" என்று கூறினார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP