ஆசிய போட்டியில் இருந்து விலகினார் லியாண்டர் பயஸ்

ஆசிய போட்டியில் இருந்து இந்தியாவின் முன்னை டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் விலகியுள்ளார்.
 | 

ஆசிய போட்டியில் இருந்து விலகினார் லியாண்டர் பயஸ்

ஆசிய போட்டியில் இருந்து இந்தியாவின் முன்னனி டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் விலகியுள்ளார். 

இந்தோனேசியாவின் பலேம்பாங்கில் நாளை (18ம் தேதி) 18-வது ஆசிய போட்டிகள் துவங்க இருக்கிறது. இதில் இந்திய தரப்பில் இருந்து, ஆடவர் பிரிவில் 311, மகளிர் பிரிவில் 260 என மொத்தம் 571 வீரர்கள் பங்கேற்கின்றன. 36 விளையாட்டு பிரிவுகளில் இவர்கள் பங்கேற்க உள்ளனர். 

இந்த நிலையில், அனைத்திந்திய டென்னிஸ் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹிரோன்மொய் சட்டர்ஜீக்கு, முன்னணி டென்னிஸ் வீரரான பயஸ், மின்னஞ்சல் மூலம் ஆசிய போட்டியில் இருந்து தான் விலகுவதாக தெரிவித்துள்ளார். 

அந்த இ-மெயிலில் அவர், ஆசிய போட்டியில் நான் இரட்டையர் பிரிவில் சிறந்தவருடன் மோத விரும்புகிறேன். ஆனால், போட்டியில் ஒற்றையர் பிரிவு போட்டியாளருடன் இணைந்து செயல்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. கடைசி நேரத்தில் நான் விலகியதால், என்னுடைய இடத்தில் ஜூனியர் வீரர்களுக்கு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார். 

டென்னிஸ் அணியில், ஒற்றையர் பிரிவு வீரர்களான ராம்குமார் ராமநாதன், பிரஜ்நேஷ் குன்னேஸ்வரன், சுமித் நகல் மற்றும், இரட்டையர் பிரிவு வீரர்களான ரோஹன் போப்பன்னா, டிவிஜ் ஷரன், பயஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இரட்டையர் பிரிவில், போப்பன்னா - ஷரன் ஜோடி சேர்ந்து விளையாடுவர். அதே சமயம் பயஸ் ஜோடியாக ஒற்றையர் பிரிவில் இருந்து ஒரு வீரர் தேர்வு செய்யப்படுவர். தற்போது பயஸ் விலகியதால், ஒற்றையர் பிரிவில் இருந்து வீரர்கள் களமிறக்கப்பட இருக்கின்றனர். 

45 வயதாகும் பயஸ், ஆசிய போட்டியில் 8 பதக்கங்கள் வென்றுள்ளார். அதில் மூன்று இரட்டையர் பிரிவில் அவர் வென்ற தங்கப்பதக்கம் ஆகும். ஒன்று கவுரவ் நடேகருடனும் (1994), மற்ற இரண்டு பதக்கங்கள் மகேஷ் பூபதியுடனும் (2002, 2006) பெற்றது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP