ரசிகர்களால் கடுப்பான நோவாக் ஜோகோவிச்

விம்பிள்டன் போட்டியில் விளையாடிக்கொண்டு இருந்த போது ரசிகர்கள் தொந்தரவு செய்ததால் ஜோகோவிச் கோபமடைந்தார்.
 | 

ரசிகர்களால் கடுப்பான நோவாக் ஜோகோவிச்

விம்பிள்டன் போட்டியில் விளையாடிக்கொண்டு இருந்த போது ரசிகர்கள் தொந்தரவு செய்ததால் ஜோகோவிச் கோபமடைந்தார். 

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பாரம்பரிய டென்னிஸ் தொடரான விம்பிள்டன் தொடர் இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த 2ம் தேதி தொடங்கிய இது 132 விம்பிள்டன் தொடராகும். 

இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச்சும், இங்கிலாந்து வீரர் எட்மண்டும் மோதினர். இதில் ஜோகோவிச்  4-6, 6-3, 6-2, 6-4 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். 

இப்போட்டியில் உள்ளூர் வீரரான எட்மண்டுக்கு ஆதராக ஜோகோவிச் சர்வ் செய்ய தயாரான போது, அவரை திசை திருப்பும் விதமாக, கேலரியில் அமர்ந்திருந்த ரசிகர்கள் செயல்பட்டனர். 

இது ஜோகோவிச்சை கோபமடைய செய்தது. இதுகுறித்து ஜோகோவிச் கூறுகையில், ரசிகர்கள் தேவையில்லாமல் நான் செர்வ் செய்யும் போது தொந்தரவு அளித்தனர். அவர்கள் நடந்து கொண்டே இருந்தனர். அவர்கள் நினைப்பது அனைத்தையும் மைதானத்தில் செய்ய முடியாது. இதையெல்லாம் ஒரளவுக்கு தான் பொறுத்துக்கொள்ள முடியும்" என்றார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP